நில புல வரைபடம் ( nila pula varaipadam ) - நிலம் வைத்திருப்பவர்களுக்கு சர்வே எண்ணை வைத்து உங்கள் நிலத்தின் எக்ஸாக்ட் வரைபடத்தை எளிதாக காணலாம். ஒரு சிலர் சதுரம் அல்லது செவ்வகம் வடிவத்தில் அல்லது வேறு ஏதாவது ஒரு கோணத்தில் இருக்கும் என்று நினைப்பதுண்டு. நேரடியாக நாம் நம்முடைய நிலங்களை பார்ப்பதற்கு அப்படி தான் இருக்கும். ஆனால் வரைபடமாக காண்பதற்கு ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும். அதை எவ்வாறு காண்பது என்று பார்ப்போம். இதற்கு உங்களிடம் புல எண் அதாவது சர்வே எண் மற்றும் அதன் உட்பிரிவு எண் இரண்டும் கட்டாயம் வேண்டும்.
1. முதலில் நீங்கள் Eservices என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அதன் புகைப்படம் பின்வருமாறு இருக்கும்.
2. பிறகு இந்த எட்டு விவரங்கள் அல்லது தலைப்புகள் காணப்படும். இதில் 5 ஆவது option யை தேர்வு செய்யுங்கள்.
3. இதனை தேர்வு செய்த உடன் உங்கள் வட்டம், கிராமம் மற்றும் மாவட்டங்களை சரியாக தேர்வு செய்யுங்கள். முக்கியமாக புல எண் மற்றும் அதன் உட்பிரிவு எண் சரியாக அதில் என்டர் செய்யவும்.
4. ஒரு சர்வே எண்ணில் பல உட்பிரிவு இருக்கும். ஏனென்றால் அந்த நிலத்தை தனி தனியாக பிரிக்கும் போது அத்தகைய நம்பர்கள் வழங்கப்படும். இதனை பூர்த்தி செய்து விட்டு கடைசியில் அங்கீகார மதிப்பை சரியாக என்டர் செய்யுங்கள். ஒரு விண்டோ ஒன்று ஓபன் ஆகும். அதில் புலப்படம் பார்வையிட என்று இருக்கும். அதனை தேர்வு செய்யுங்கள்.
5. இந்த புலப்படம் பார்வையிட option யை தேர்வு செய்த பின்னர் இறுதியாக உங்கள் நிலத்தின் புல வரைபடம் தோன்றும்.