நில சீர்திருத்த சட்டம் 1961 தமிழ்நாடு ( tamil nadu land reforms act, 1961 in tamil ) - முதலில் நில சீர்திருத்தம் என்றால் என்ன பார்க்கலாம். அதிகளவு உள்ள நிலங்களை நிலம் இல்லாத வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கும் அரசாங்க பொது நோக்கத்திற்காகவும் எடுத்து கொள்ளும். இதனை நிலம் சீர்த்திருத்தம் அல்லது நில உச்சவரம்பு சட்டம் என்றும் சொல்லலாம்.
1949 இல் ஜமீன்தார்கள் ஒழிப்பு சட்டம் நிகழ்ந்தாலும் மத்திய அரசு 1958 இல் தான் இந்த சட்டத்தினை கொண்டு வந்தது. ஆனாலும் தமிழ்நாடு அரசு சார்பில் 1961 இல் தான் சீர்திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக ஐந்து நபர்கள் 30 தர ஏக்கர் நிலங்களை கொண்டிருக்கலாம் என்றும் அதற்கு மேல் வைத்திருந்தால் அதனை அரசு கையகப்படுத்தும் என்றும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: Tamilnilam
1970 மற்றும் 1972 இல் குடும்ப உறுப்பினர்கள் மொத்தமாக 15 தர ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சீர்திருத்த நிலங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வரையும் இச்சட்டம் உள்ளது. சீலிங் செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானவை ஆகும். புதிதாக நிலம் வாங்க போகிறீர்கள் என்றால் அது சீலிங் நிலமா என்று ஆராய்ந்த பின்னர் வாங்க வேண்டும். இதற்கென்று ஒவ்வொரு பகுதிகளிலும் land ceiling அலுவலகம் உள்ளது.
இதையும் பார்க்க: ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள்
குறிப்பு
1 தர ஏக்கர் என்றால் 1 ஏக்கர் இல்லை. புஞ்சை, நஞ்சை, மானாவாரி, நிலத்தின் தன்மை மற்றும் வகைப்பாடு பொறுத்தே தர ஏக்கர் கணக்கிடப்படும். ஒரு சில நேரத்தில் 4 ஏக்கர் சேர்ந்தது 1 தர ஏக்கர் நிலத்திற்கு சமம் ( இது எடுத்துக்காட்டுக்கு மட்டும் ).
இதையும் பார்க்க: ஈஸ்மெண்ட் பாத்தியம்