நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம் - நிலம் கையகப்படுத்தல் என்பது தனியார் அல்லது தனியாருக்கு சொந்தமான நிலங்களை அரசு பொது நிறுவனங்கள், பொது மண்டலங்கள் மற்றும் பொது தேவைக்காக எடுத்து கொள்வது ஆகும். இதனை நில எடுப்பு சட்டம் என்றும் அழைக்கலாம். இந்த சட்டமானது முதன் முதலில் இந்தியாவில் 1894 ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்கு தேவையான நிலங்களை எளிதாக கையகப்படுத்தி அங்கு அரசாங்கம் பொது தேவைகளுக்காக உபயோகித்து கொண்டது. ஆனால் இதன் இழப்பீடு விகிதம், வெளிப்படை தன்மை மற்றும் மறுவாழ்வு போன்றவைகள் எல்லாம் கேள்விக்குறியாக இருந்தது. இதனை சரிகட்டவே மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு ஒரு நியாயமான சட்டத்தை உருவாக்கியது.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013
நில எடுப்பு சட்டம் 2013 ஆம் ஆண்டு அரசு தன் தேவைக்காக நிலங்களை எடுத்துக்கொண்டாலும் அதற்கு சரியான விலை, வெளிப்படை தன்மை சரியாக இருக்கும் என்று நோக்கத்தினை உருவாக்கியது. இதனை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதற்கு நிபந்தனைகளும் அரசாங்கம் விதித்திருந்தது. அவற்றின் சில படிகள் ( அரசும் மக்களும் எப்படி செயல்பட வேண்டும் ) என்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ளன.
கிராம கணக்கு எண்
1. அரசாங்கம் ஒருவரிடம் அல்லது ஒரு ஏரியா முழுவதும் நில ஆக்கிரமிப்பு செய்யும்போது அரசு இதழில் கொடுக்க வேண்டும்.
2. அரசு இதழில் கொடுக்கும் முன்னர் ஆக்கிரமிப்பு செய்யும் பகுதிகள் என்னென்ன விளைவுகள் சந்திக்கும் என ரிப்போர்ட் உருவாக்குவது.
3. வட்டார அளவில் உள்ள செய்தித்தாளில் குறிப்பிட வேண்டும்.
4. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட வேண்டும்.
5. இந்த அனைத்தும் முடிந்த பின்னர் விவசாயிகளோ அல்லது பொது மக்களோ ஆட்சேபணைகள் இருக்குமாயின் 60 நாட்களுக்குள் உங்கள் பதில்களை மாவட்ட கலெக்டரிடம் கூற வேண்டும்.
6. அப்படி உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு மறுவாழ்வு திட்டத்திற்கு உங்கள் மனு செல்லும்.
7. ஒருவேளை உங்கள் மனு நிராகரிக்கப்பட்டால் நிலம் கையகப்படுத்தப்படும்.
8. இதில் இழப்பீடு தொகையாக 30 % விழுக்காடு ஆறுதல் தொகை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
9. வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பில் உங்கள் நிலங்கள் மதிப்பு போட வேண்டும்.
10. இதில் சேதாரம் ஆக மரங்கள், கட்டிடங்கள் இவைகளுக்கு ஏற்பட்டால் அதற்கும் தொகை வழங்கப்படும்.
11. ஒரு சில நேரத்தில் உங்கள் நிலமே வாழ்வு மற்றும் அது மட்டும் தான் உள்ளது என்றால் வேறு ஒரு இடத்திற்கு மறுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்றி கொடுப்பார்கள்.
12. பண தொகை அல்லது இழப்பீடு தொகை உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் வாதாடலாம்.
தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா