நிலம் பாகப்பிரிவினை செய்ய sub division - நில பாகப்பிரிவினை என்பது தமது சொந்தத்துக்குள்ளே நடக்கும் விஷயமாகும். சகோதர், சகோதரி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என குடும்பத்திற்குள்ளேயே நடக்கும் போராட்டமாகும். இதில் சப் டிவிசன் என்பது ஒரு நிலத்தை பிரிக்கும் போது அங்கு உண்டாகும். உதாரணமாக ஒரு நிலம் ஏற்கனவே ஒரு நிலம் சர்வே எண்களோடு இருக்கிறது என்றால் அந்த நிலத்தினை இரண்டு, மூன்று அல்லது நான்கு பங்காக பிரித்து அதற்கு ஒரு எண் ஒன்றை வழங்குவர். அதனை தான் சப் டிவிஷன் நம்பர் என கூறுவோம்.
சப் டிவிசன் பிரிக்கும் முறை
எடுத்துக்காட்டாக, உங்கள் அப்பா ஒரு நிலம் வைத்திருக்கிறார் என்றால் அவர் அந்த நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனாலும் வெளியில் அந்த நிலத்தை கொடுப்பதற்கோ அல்லது தானமாகவோ ஒரு மூன்றாவது நபருக்கு கொடுப்பதற்கோ சிலர் மனம் வருவதில்லை. ஒரு சிலர் குடும்பத்திற்கு தனது சொத்தை கொடுக்க ஏற்பாடு செய்கிறார் என்றால் அதனை பாக பிரிவினை செய்ய ஏற்பாடு செய்வார்கள். அப்படி பாகப்பிரிவினை செய்யும்போது புல எண்களை பிரித்து உட்பிரிவு எண்களை உருவாக்குவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் சொத்துக்கள் சரியாக அல்லது முறையாக பிரித்து கொடுக்கலாம்.
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பிரிக்கும் முறை
அதை வடக்கு, மேற்கு, கிழக்கு என்று தனித்தனியாக பிரிப்பர். அப்படி பிரித்தால் சரியாக பிரித்து கொள்வது நல்லது. அப்படி யாரோ ஒருவர் எனக்கு நிலம் அல்லது வேறு ஏதேனும் சொத்துக்கள் வேண்டாமென்றால் அவர்களுக்கு சொத்து கொடுப்பவர் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்கி பதிவு செய்யலாம். இதனால் பின்னாளில் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தவர் பிரச்சனையை செய்ய முடியாது. ஒருவேளை உங்களுக்குள்ளே சண்டைகள் என்றால் நீங்கள் கோர்ட்டில் சென்று டிகிரி வாங்கலாம். அதற்கு பிறகு அவர்களுக்கு மனம் இல்லை என்றால் அது பொது ஏலத்திற்கு கூட போக வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பு
இந்த நிலங்கள் மற்றும் மனைகள் சுயமாக சம்பாதித்து வாங்கினால் சொத்தின் உரிமையாளர் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை உரிமை கோரவோ அல்லது நியாயம் கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை.