நிலம் பிரச்சனை

நிலம் பிரச்சனை - நிலம் பிரச்சனை பொதுவாக எல்லை, நிலம் மற்றும் வீட்டின் சில பகுதியில் ஏற்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் சண்டை போட்டு கொள்கின்றனர். ஏனென்றால் இந்த இடம் என்னுடையது அல்லது இந்த உன்னுடையது என்று. இதற்காக அவர்கள் அரசு சர்வேயர் கொண்டு நிலம் அளக்க திட்டமிடுவர். கண்டிப்பாக இருவருக்குமே பட்டா இருத்தல் அவசியம். ஒருவேளை பட்டா இல்லையென்றால் கண்டிப்பாக சர்வேயர் நிலம் அளக்க வரமாட்டார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிலம் பிரச்சனை


ஒருவர் நிலத்தை அனுபவித்து வருகின்றார் ஆனால் அது கூட்டு பட்டாவாக இருக்கிறது. அந்த நிலத்தில் எனக்கும் பங்கும் இருக்கிறது என்றால் மொத்தமாக சர்வேயர் கொண்டு நிலத்தை அளந்து உங்களுக்குண்டான பங்கை பார்த்து கொள்ளுங்கள். தனி பட்டாவாக மாற்றி கொண்டு சப் டிவிஷன் நம்பர் போட்டு உங்கள் நிலத்தை எடுத்து கொள்ளுங்கள். முக்கியமாக எத்தனை சென்டிற்கு நிலத்தின் பட்டா இருக்கிறதோ அத்தனை சென்டிற்கு தான் சர்வேயர் கொண்டு நிலம் அளக்க முடியும்.

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

இப்படி பல பல பிரச்சனைகள் நாம் பார்த்து கொண்டுதான் வருகின்றோம். எது எப்படியோ பட்டா இருந்தால் தான் உங்கள் நிலம் உங்களிடம் வரும். யாரும் பிரச்சனை செய்ய மாட்டார்கள். ஒருவேளை உங்கள் நிலம் யாராவது அபகரித்து வந்தால் அல்லது என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினால் உங்கள் பட்டாவை வைத்து நாம் பதிலை தேடலாம். பட்டாவில் உள்ள நில வரைபடத்தை வைத்து தான் சர்வேயர் உங்கள் நிலத்தை அளவெடுப்பார். 

உங்கள் நிலம் அவர்கள் அனுபவித்து வரும் வேலையில் அந்த நபரிடம் பத்திரம் உள்ளது என்றாலும் பரவாயில்லை. பட்டாவில் உள்ள FMB வைத்து தான் அளக்க முடியும். பட்டாவின் உரிமையாளர் அவர்கள் UDR க்கு பிறகு அப்டேட் செய்த பட்டாவை சர்வேயரிடம் கொடுத்து நிலம் அளப்பது நல்லது.

நத்தம் என்றால் என்ன

Power Of Attorney என்றால் என்ன

Fb பேஜ்