நிலம் வாங்க உகந்த கிழமை 2025 ( nilam vanga nalla naal 2025 ) - நிலம் வாங்குவதென்பது தற்போது அரிதான ஒரு செயல் ஆகி விட்டது எனலாம். ஏனெனில் நிலைகளின் விலைகள் சற்று அதிகமாக தான் தென்படுகின்றது. ஆனாலும் தங்கள் தேவைகளுக்காக மக்கள் வாங்க கூடிய செயல் ஏற்படுகின்றது.
நிலம் வாங்க சரியான நாளாக சொல்வதென்றால் அது நிச்சயமாக புதன் என்றே சொல்லலாம். புதன் கிழமை மிகவும் சரியான நாளாக நிலம் வாங்க உகந்ததாக இருக்கும். ஆனால் அன்றைய தினம் மேல்நோக்கு நாளாக இருக்க வேண்டும். கீழ்நோக்கு நாளாக இருந்தால் அன்றைய தினம் தவிர்த்தல் நல்லது. புதன் கிழமை அமையவில்லை எனில் திங்கள் கிழமையை உபயோகித்து கொள்ளலாம்.
திதிகள்
திதிகள் என்று பார்த்தால் வளர்பிறை சதுர்த்தி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதிகள் இருந்தால் நல்லது. அதும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மேலே உள்ள திதிகள் வந்தால் கூடுதல் சிறப்பு.
வாங்க கூடாத மாதங்கள்
1. பங்குனி
2. ஆனி
3. புரட்டாசி
4. மார்கழி
வாங்க கூடிய மாதங்கள்
1. வைகாசி
2. கார்த்திகை
குறிப்பு
இதில் உள்ள மாதங்கள் அல்லாமல் வாஸ்து நாட்கள் வரக்கூடிய நாட்களையும் யூஸ் செய்து கொள்ளலாம்.