நிலம் வழிகாட்டி மதிப்பு அறிவது எப்படி மற்றும் வழிகாட்டி மதிப்பு பார்ப்பது எப்படி - சிலர் வழிகாட்டி மதிப்பு என்றால் வேறு ஒரு அர்த்தமாய் புரிந்து கொள்கிறார்கள். ஒரு காலியான அல்லது வீட்டின் மனை உள்ளது என வைத்து கொள்வோம். அரசாங்கத்திற்கென்று ஒரு விலை நிர்ணயம் உள்ளது. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அரசாங்கமானது காலியான மனையாக இருந்தாலும் சரி அல்லது அதில் வீடு அல்லது கடைகள் கட்டி இருந்தாலும் சரி நிலத்தின் மதிப்பை மட்டுமே விலையை நிர்ணயிக்கும். ஒரு சிலர் நிலமோடு வீடும் சேர்ந்து வாங்கி இருந்தால் அவர்கள் நிலத்தையும் மற்றும் வீட்டினையும் இரண்டாக பிரித்து விலையை ஏற்று வாங்க வேண்டும். அரசு நில மதிப்பு வழிகாட்டி அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்பு இவை இரண்டுமே ஒரே ஒரு அர்த்தம் தான்.
இதில் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். Guideline Value ஊருக்கு ஊர் அல்லது நகரத்துக்கு நகரம் மாறுபடும். ஒரு சில ஏரியாக்களில் விலை கூடுதலாகவும் ஒரு சில ஏரியாக்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக கிராம புறங்களில் ஒரு மாதிரியும் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் தாலுகாவில் ஒரு மாதிரியும் விலை இருக்கும். இரண்டிருக்குமே ஒப்புதல் நீங்கள் போடக்கூடாது. அரசாங்கம் ஒவ்வொரு நகரத்திற்கு நகரம் அல்லது கிராமங்களுக்கும் தனித்தனியே விலையை தீர்மானிக்கும். இதனை அனைத்துமே நாம் ஒரிஜினல் வெப்சைட் எனப்படும் Tnreginet இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: https tnreginet gov in portal
வழிமுறைகள்
1. முதலில் இடது பக்கத்தில் வழிகாட்டு மதிப்பு தேர்வு செய்யுங்கள்
2. பிறகு உங்களுடைய மனையின் புல எண் தெரிந்தால் அதனையும் அல்லது தெரியவில்லை என்றால் தெரு என்பதனையும் தேர்வு செய்யுங்கள்.
3. கேட்கும் இதர விவரங்களை முடித்த பின்னர் உங்கள் தெரு அல்லது உங்கள் இடத்தின் மதிப்பு பட்டியல்கள் சதுர அடியில் எவ்வளவு பணம் என்பதை காண்பிக்கும்.