நிலநடுக்கோடு சூரியனை நேராக சந்திக்கும் நாட்கள் - நிலநடுக்கோட்டினை பூமத்திய ரேகை அல்லது மையக்கோடு என்றும் அழைக்கலாம். இந்த நில நடுகோடானது வடமுனை மற்றும் தென்முனைகளில் பூமி உருண்டையை சுற்றி சமத்தொலைவில் இருக்கும். சம தொலைவில் உள்ள கோடுகளை கற்பனை கோடுகள் என்றழைக்கலாம். இந்த கற்பனை கோடுகள் இரண்டு கோளங்களாக பிரிகிறது. ஒன்று வடஅரைக்கோளம் மற்றொன்று தென் அரைக்கோளம் ஆகும். இதன் நீளம் 40, 075 கிலோ மீட்டர் ஆகும்.
பூமியின் சுழற்சி வேகம் பூமத்திய கோட்டில் மணிக்கு 1670 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு காரணம் பூமியானது தன்னைத்தானே சுற்றி வர ஆகும் காலம் 24 மணி நேரம் என்பதே. சூரியனின் கதிர்கள் நேராக விழுவதால் அதிக வெப்பமும் அதிக மழைப்பொழிவு பூமத்திய ரேகையில் காணப்படும். இதனால் அந்த பகுதிகளில் மழைக்காடுகள் அதிகம் காணப்படுகிறது.
சூரியனை சந்திக்கும் நாட்கள்
நிலக்கோடுகளின் மீது சூரியக்கதிர்கள் செங்குத்தாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆண்டு விழுகிறது. இதனால் நிழல்கள் தெரிவதில்லை. இதனை தான் நிலக்கோடுகள் சூரியனை சந்திக்கும் நாட்களாக கருதப்படுகிறது.
பூமியில் ஒரு மனிதனின் நிறை 50கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு