நிதி ஆயோக் என்றால் என்ன

நிதி ஆயோக் என்றால் என்ன - நிதி ஆயோக் முதலில் மத்திய திட்டக்குழு என்று தான் இருந்தது. திட்டக்குழுவானது முதலில் மார்ச் 15, 1950 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. இதன் முதல் நோக்கமே திட்டமாக செயல்பட்டு மாநிலங்களை வளர்ச்சி பாதையில் கொண்டே செல்வதாகும். ஆனால் இதன் திட்டங்களை பொறுத்தவரை அதிகமாக இருந்து குறைவாக கொண்டு வருவதே. இதனால் ஒரு சில மாநிலங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் சென்றது. இதனால் மத்திய அரசாங்கமானது 2014 ஆம் ஆண்டு இந்த திட்டக்குழு முடிவுக்கு வந்தது.

நிதி ஆயோக் என்றால் என்ன


ஆகஸ்ட் 13, 2014 ஆம் ஆண்டு தான் அரசு இதனை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. பிறகு 2015 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. அதாவது 65 ஆண்டுகள் கழித்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லி ஆகும்.

இந்திய நிதி அமைச்சர் பெயர் 2023

நிதி ஆயோக் தலைவர் 2023

அரசாங்கமானது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வருகிறது. அதில் யார் பிரதமராக இருக்கிறார்களோ அவரே தலைவராக இருப்பார். இவர் துணை தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவினை தேர்ந்து எடுப்பார். மேலும் இந்த நிர்வாகத்தில் தலைமை செயல் அதிகாரி ( Ceo ) மற்றும் இயக்குநர் அவர்களும் இருப்பார்கள்.

நிதி ஆயோக் துணை தலைவர் 2023

தற்போதைய துணை தலைவர் யாரென்றால் திரு. சுமன் பெரி அவர்கள் தான். இதேபோன்று நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவர் திரு. அரவிந்த் அவர்கள் செயல்பட்டார்.

தமிழ்நாடு மேற்கு மாவட்டங்கள் பட்டியல்

நிதி ஆயோக்கின் பணிகள்

1. ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையை மேற்கொள்தல்.

2. கிராம வளர்ச்சியை பேணிக்காத்தல்.

3. இந்திய பொருளாதார கொள்கையை தீர்மானித்தல்.

4. தகவல் தொழில்நுட்ப ஆலோசனை.

5. அரசின் திட்டங்களை அமல்படுத்துதல்.

நிதி ஆயோக் ரிப்போர்ட் 2023

ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள். அதில் ஒவ்வொரு மாநிலங்களின் நிலை குறித்தும் குறியீடுகள் கொடுத்தும் வெளியிடுவார்கள். மொத்தமாகவும் அல்லது தனித்தனி திட்டங்களுக்கென குறியீடுகளும் வழங்குவார்கள். இதனால் இந்தியாவில் உள்ள மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் நிலையினை குறித்து அறியும். தற்போதைய நிலையில் தமிழ்நாடு மாநிலம் 74 சதவீதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குறியீடுகள் வருடத்திற்கு ஒருமுறை மாறுபடும்.

வேளாண்மை துறை மானியம் 2023