Nphh ரேஷன் கார்டு தகுதி

Nphh ரேஷன் கார்டு தகுதி ( Nphh ration card meaning tamil ) - இதனை முன்னுரிமையற்ற அல்லது முன்னுரிமை அல்லாத கார்டு வகையினை சார்ந்தது எனலாம். இது மொத்தமாக மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று Nphh, இரண்டு Nphh - S, மூன்று Nphh - Nc ஆகும். மூன்று வகையான அட்டைகள் தமிழ்நாட்டில் 90 லட்சத்திற்கும் மேலாக வைத்திருக்கின்றனர்.

Nphh ரேஷன் கார்டு தகுதி


Nphh

முதலில் உள்ள அட்டை வகை என்னவென்றால் அரசி, சர்க்கரை உள்பட அனைத்து பொருட்களையும் பெற்று கொள்ளலாம். ஆனால் முன்னுரிமை மட்டும் கிடையாது. உதாரணமாக தற்போது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாத மாதம் வருகின்ற ரூபாய் 1, 000 போன்ற திட்டங்கள் இவர்களுக்கு கிடையாது.

ரேஷன் கார்டு பெயர் நீக்குதல் தேவையான ஆவணங்கள்

Nphh - S

இரண்டாம் உள்ள வகை என்னவென்றால் சர்க்கரை அட்டை சேர்ந்தது. அரிசி மட்டும் இவர்களுக்கு கிடையாது. அது மட்டுமல்லாமல் மற்ற திட்டங்களின் கீழ் வருகின்ற எந்த வித சலுகை, மானியம், உரிமை தொகை ஏதும் கிடையாது.

ரேஷன் கார்டு பதிவிறக்கம்

Nphh - Nc

மூன்றாவது உள்ள வகை என்னவென்றால் எந்த வித அரசி, சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் இல்லை. மேற்கண்ட முதல் மற்றும் இரண்டாம் வகைகளை போல எந்த வித சலுகையும் கிடையாது. இதனை அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தலாம்.

ரேஷன் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி