ஊராட்சி மணி ( ooratchi mani gov in ) - ooratchimani in tamil என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அரசாணை நிலை எண் 117 இன் படி செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி 2023 அன்று துவக்கப்பட்டது. இந்த புதிய திட்டம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுகிறது.
இதன் நோக்கமே ஊராட்சியில் இருக்கின்ற மக்கள் தங்கள் புகார்களை எவ்வித ஐயமுமின்றி தெரிவிக்கலாம். 155 340 எண் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், விலாசம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி பெயர் சொன்னால் போதுமானது. பிறகு உங்கள் புகாரை கூறலாம்.
இதையும் படியுங்க: Tamilnilam
இதனை நேரடியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் கண்காணிப்பார். புகார்களின் வகைகள் மற்றும் துறை வாரியாக அதிகாரிகளுக்கு அல்லது அலுவலர்களுக்கு அனுப்புவார். பெறப்படும் செய்தியை உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்புவார்.
இதையும் படியுங்க: EC patta