ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி

ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி ( 1 ஏக்கர் எத்தனை சென்ட் பரப்பளவு ஏர்ஸ் ) - பொதுவாகவே நில அளவுகளை முன்பு எல்லாம் ஏக்கர் என்று அழைப்பார்கள். அதாவது அதிகமுள்ள வைத்துள்ள நிலத்தின் சொந்தக்காரர்களை எத்தனை ஏக்கர் இருக்கிறது என்று கேட்பார்கள். ஏனெனில் அப்போது எல்லாம் மக்கள் பொதுவாகவே குறைந்தபட்சம் ஒன்றாவது ஏக்கர் கணக்கில் நிலங்களை வைத்து விவசாயம் செய்வார்கள். இதனை மா, குழி, காணி என்று பழங்கால முறையில் அழைத்தாலும் தற்போது ஏக்கர் மற்றும் ஹெக்டேர் போன்ற மெட்ரிக் அளவீடுகளை வைத்து நிலங்களை வகைப்படுத்துகின்றனர்.

ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி


ஏக்கர் என்றால் என்ன

சாதாரணமாக ஏக்கர் என்பது ஒரு கிரவுண்ட் ஆக கருதப்படாது. ஒரு சிலர் ஏக்கர் என்றால் அது கிரௌண்ட் என்று நினைத்து கொள்வதுண்டு. கிரௌண்ட் வேறு இது வேறு. இந்த கிரவுண்ட் ஆனது 2400 சதுர அடி அல்லது 5.5 சென்ட் மட்டுமே. ஆனால் இது 100 செண்டுகள் க்கு சமமாகும். சதுர மீட்டரில் சொன்னால் 4047 ஆகவும், 3.5 மா ஆகவும், 43560 சதுர அடியாகவும், 0.404 ஹெக்டேராகவும், 160 சதுர பாகங்களாகவும், 4840 சதுர யார்ட் ( குழி ) அல்லது சதுர கெஜம் ( முழங்கல் ) ஆகவும் உள்ளது.

1 ஹெக்டேர் எத்தனை சென்ட்

இதில் ஒரு மனை என்றால் 2400 சதுர அடி மட்டுமே. அதாவது இந்த 1 ஏக்கரில் 18 வகையான மனைகளை உருவாக்கி வீடுகளை கட்டிக்கொள்ளலாம். ஆனால் 2400 சதுர அடியென்பது 5.5 சென்ட் என்றாலும் அதில் இரண்டு அல்லது மூன்று வீடுகளை கூட கட்டலாம். ஏன் ஒரு சிலர் 1 சென்ட் அதாவது 435 சதுர அடியிலும் வீடுகளை கட்டி வாழ்கிறார்கள்.

ஒரு சதுரம் எத்தனை Square feet