ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி

ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி - மில்லியன், பில்லியன் மற்றும் டிரில்லியன் என்னும் வார்த்தைகள் பெரும்பாலும் மேற்கத்திய எண்கள் என்பார்கள். அதாவது வெளிநாட்டவர் அதிகம் உபயோகப்படுத்தும் எண்முறை ஆகும். உதாரணமாக இந்தியாவில் 10, 00, 000 எண்ணை பத்து லட்சம் என்போம். ஆனால் வெளிநாட்டவர் ஒரு மில்லியன் என்பார்கள். பொதுவாகவே இந்த மேற்கத்திய எண்கள் எல்லாம் ஜிடிபி எனும் உள்நாட்டு உற்பத்தியில் அதிகமாக பேசும் வார்த்தைகளுள் ஒன்றாகும்.

ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி


நடைமுறையில் 1000, 2000, 10, 000 ஏன் லட்சம், கோடிகள் வரையும் பேசுவது எளிமை. அதற்கு மேல் இந்த மேற்கத்திய எண்களில் குறிப்பிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும் காரணத்தினால் நாம் அதனை உபயோகிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு நிகர் தமிழ் எண்கள் இருந்தாலும் பொதுவாக அதனை யாருமே தற்போது உபயோகிப்பதில்லை. இங்கே ஒரு சில எண்களின் மதிப்பு பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 ஹெக்டேர் எத்தனை சென்ட்

1. ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி - 1 லட்சம் கோடி ( நான்மடியாயிரம் )

2. ஒரு பில்லியன் எத்தனை மில்லியன் - 1000

3. ஒரு மில்லியன் என்பது எத்தனை கோடி - 10 லட்சம் மட்டுமே

4. 1 பில்லியன் எத்தனை கோடி - 100

5. 100 மில்லியன் என்பது எத்தனை கோடி - 10 கோடி.