பாகப்பிரிவினை பத்திரம் செலவு

பாகப்பிரிவினை பத்திரம் செலவு ( Partition deed stamp duty in tamilnadu ) - ஒரு சொத்தை இரண்டு மூன்று அல்லது நான்கு மற்றும் அதற்கு மேல் உரிமை மாற்றம் செய்ய பாகப்பிரிவினை பத்திரம் எழுதப்படுகின்றது. இது பொதுவாகவே பூர்வீக சொத்தை பிரிக்கும்போது எழுதப்படுகின்றது. ஆனாலும் சுய சம்பாதித்த சொத்தையும் இப்படி செய்கிறார்கள்.

பாகப்பிரிவினை பத்திரம் செலவு


இந்த பாகப்பிரிவினை சொத்தை பெறாதவர் அல்லது வேண்டாம் என்று சொல்கின்றவர்களை விடுதலை பத்திரம் எழுதி வாங்கி வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சொத்தில் பங்கு இருக்கும் நபர்களுக்கு அது பிரச்சனையே.

இதையும் படிக்க: அண்ணன் தம்பி பாகப்பிரிவினை

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கும் சொத்து என்றால் முத்திரை தாள் கட்டணம் 1 சதவீதம் அதாவது அதிகபட்சமாக 25, 000 ரூபாயும் பதிவுக்கட்டணமாக 1 சதவீதம் அதாவது அதிகபட்சமாக 4, 000 ரூபாயும் ஆகும்.

இதையும் படிக்க: பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

குடும்ப அல்லாத உறுப்பினர்கள்

குடும்ப அல்லாத நபர்களுக்கு பிரித்து கொடுக்கும் சொத்து என்றால் முத்திரத்தீர்வை கட்டணம் 4 சதவீதம் ( சந்தை மதிப்பு ) மற்றும் பதிவுக்கட்டணம் 1 சதவீதமும் கட்ட வேண்டும்.

இதையும் படிக்க: பாகப்பிரிவினை செய்வது எப்படி