பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது, என்ன செய்ய வேண்டும் ( i lost my pan card and i don't know the number ) - ஒரு அடையாள சான்று அல்லது ஆவணமாக இதனை நாம் பயன்படுத்தலாம். முகவரி ஆவணமாக மட்டும் இதனை பயன்படுத்த முடியாது. ஏனெனில் பான் கார்டுகளில் பெயர், எண் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டிருக்கும். பயனாளர்களின் முகவரி அப்டேட் செய்யப்பட மாட்டாது.
பெரும்பாலும் வங்கிகளின் பரிவர்த்தனைக்கு பான் கார்டு தற்போது கட்டாயமாக இருக்கிறது. பான் கார்டு தொலைந்து விட்டால் மூன்று அரசு இணையத்தளத்தில் எடுத்து கொள்ளலாம். incometax, nsdl மற்றும் uti போன்ற இணையத்தளங்கள் பான் கார்டினை திருத்தம், புதிதாக வாங்க, விண்ணப்பிக்க பயன்படுகின்றது.
மேற்கண்ட புகைப்படத்தில் உங்கள் பான் கார்டுடைய எண், ஆதார் எண், பிறந்த தேதி ஆகியவைகளை பூர்த்தி செய்தால் புதிதாக கார்டினை பெற்று கொள்ளலாம். ஆனால் கார்டு நம்பர் தெரியவில்லை எனில் 1800 180 1961 எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உங்கள் பான் எண் தெரிந்துவிடும்.
இதையும் பார்க்க: பான் கார்டு பிறந்த தேதி திருத்தம்