பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெற என்ன வழி?

பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெற என்ன வழி? - கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மனை பிரிவுகள் என்றாலும் நிச்சயம் DTCP அப்ரூவல் கட்டாயமாகும். நகர்ப்புறம், கிராமப்புறங்களில் வீட்டடி மனைகள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரமில்லாத இடம் என்றாலோ அல்லது ஏற்கனவே அங்கு வீடுகள் கட்டி இருந்தாலோ மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர வசதிகள் நிறுத்தப்படும்.

பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெற என்ன வழி?


21.10.2016 க்கு முன்னர் மனைகள் பதிவு செய்திருந்தால் அந்த இடத்திற்கு இப்போதும் அப்ரூவல் வாங்கி கொள்ளலாம். அதாவது வாங்கிய இடம் அங்கீகாரம் இல்லாத மனையாக இருந்தால் அதனை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று பதிவுத்துறை அறிவித்திருந்தது.

தற்போது வீட்டடி மனைகள் பதிவு செய்வதாக இருந்தாலும் சரி அல்லது விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக பதிவு செய்தாலும் சரி நிச்சயம் DTCP ஒப்புதல் அவசியமாகும். ஒப்புதல் இல்லாத மனை பிரிவுகளுக்கு பதிவுத்துறை பதிவு செய்வதில்லை.

இதையும் பார்க்க: கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி

கிராம பஞ்சாயத்தில் இருக்கும் மனைகளுக்கு DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமென்றால் உங்கள் மூல பத்திரம், விற்பனை பத்திரம், பட்டா, லேஅவுட் ( அரசு பதிவு பெற்ற சிவில் என்ஜினீயர் மூலம் தயார் செய்யப்பட வேண்டும் ), புல வரைபடம், வில்லங்க சான்றிதழ் ( 1987 முதல் இப்போது வரை ) போன்றவைகளெல்லாம் உங்கள் பகுதிகளில் உள்ள நகர ஊரமைப்பு இயக்ககம் சென்று கொடுத்த பின்னர் அவர்கள் அதனை சரிபார்த்த பின்னர் உங்கள் மனைக்கு அங்கீகாரம் வழங்குவார்கள். கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மனைகள் இருந்தால் முறையாக கிராம பஞ்சாயத்திடம் அனுமதி வாங்குதல் அவசியமாகும்.

இதையும் பார்க்க: தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி