பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1957, 1958, 1977, 1978, 1985,1986, 1989, 1992, 1993, 1994 Pdf - இந்த சட்டத்தினை கொண்டு வர நிறைய ஆண்டுகள் வரிசையில் வந்தாலும் அதில் மிகவும் முக்கியமான ஆண்டுகளை மட்டுமே இங்கே அப்டேட் செய்துள்ளோம். இந்த சட்டம் பொதுவாகவே கிராமங்களுக்கு உருவாக்கப்பட்டது ஆகும். அதாவது இதன் நோக்கமே கிராம சுய உள்ளாட்சி அமைப்பதே ஆகும். முதலில் இரண்டு அடுக்கு முறை இருந்ததை மூன்று அடுக்காக மாற்ற தான் இந்த சட்டங்கள். மத்திய மற்றும் மாநில என இருந்ததை பஞ்சாயத்து என மூன்றாக பிரித்தார்கள். 1947 இல் இருந்து 1993 வரைக்கும் இதற்கான சட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பஞ்சாயத்து ராஜ் குழுக்கள் கமிட்டி
இருந்தபோதிலும் 1952 ஆம் ஆண்டு சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டு தேசிய விரிவுபடுத்தப்பட்ட பணிகள் இவைகள் மூன்றடுக்கு முறை வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது. அதாவது மூன்றடுக்கு ஊராட்சி முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது? என்றால் பல்வந் ராய் கமிட்டி. ஆனாலும் 1957 ஆம் ஆண்டு பலவந் ராய் 1957 ஆண்டு தான் மேற்கண்ட சட்டங்களை இயற்ற போராடியது. தொடர்ந்து 1958 மதராஸ் பஞ்சாயத்து சட்டம், 1977 இல் அசோக் கமிட்டி, 1989 நகர்பாலிக சட்டம், 1985 இல் ஜீ. கே. வி ராவ், 1986 இல் எல். எம். சிங்வி என ஏகப்பட்ட குழுக்கள் இதற்காக செயல்பட்டு இருந்தது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994
பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் முக்கியத்துவம் சிறப்பம்சங்கள்
எந்த வித பஞ்சாயத்தாக இருந்தாலும் பொது பணிகளை மேற்கொள்வதே இதன் சிறப்பம்சமாகும். உதாரணமாக குடிநீர், சாலை, பொது பணி மற்றும் இதர பணிகளை செயல்படுத்துவதே ஆகும்.
இயற்றப்பட்ட ஆண்டு
முதன் முதலில் ராஜஸ்தான் மாநிலம் தான் இந்த சட்டத்தினை பின்பற்றியது. பிறகு ஆர்டிகிள் 40 இன் படி, மாநிலங்கள் எல்லாம் இந்த திட்டத்தினை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இருந்தாலும் அதனை கட்டாயப்படுத்தாமல் பெயரளவில் மட்டுமே இருந்தன. பிறகு இந்திய அரசிலமைப்பு சட்ட திருத்தம் 73 மற்றும் விதி 243 முதல் 243 ஓ வரை இதற்கான சட்டங்களை கொடுத்து இருந்தது. இது பகுதி ஒன்பது மற்றும் அட்டவணை 11 இல் குறிப்பிட பட்டு இருக்கும். 1993 ஆம் ஆண்டு இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 24 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இறுதியாக தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 நாளாகும்.
தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2022