பஞ்சாயத்து தலைவர் அதிகாரங்கள் Pdf ( கிராம ஊராட்சி தலைவர் பணிகள் ) - கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம பிரசிடெண்ட் என்றெல்லாம் இவரை அழைக்கலாம். இவர் அவர் வாழ்கின்ற கிராமத்தில் தலைவராக முடியும். 500 மக்கள்தொகை கொண்ட ஒரு ஊராட்சியில் இவர் தேர்தல் நின்று கொள்ளலாம். ஒரு பஞ்சாயத்து என்றால் இரண்டு, மூன்று அல்லது நான்கு ஊர்களை கொண்டது பஞ்சாயத்து ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 12, 524 கிராம ஊராட்சிகள் தற்போது வரையும் உள்ளது. இவற்றினை ஊராட்சி ஒன்றியங்கள் தான் மேற்கொள்கிறது.
ஊராட்சி மன்ற தலைவர் பணிகள்
இவருடைய பணிகள் என்னெவென்றால் தெருக்களுக்கு அல்லது அந்த ஊராட்சிக்கு சிமெண்ட் ரோடு அல்லது தார் ரோடு செயல்படுத்துதல், தெரு விளக்கு, குடிநீர் குழாய்கள், பாலங்கள் அமைத்தல், இதர வளர்ச்சி திட்டங்கள், சொத்து வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவைகளை கலெக்ட் செய்தல் மற்றும் டி டி சி பி அப்ரூவல் கொடுத்தல் பணிகளை செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பணிகள்
இவருக்கு மாத சம்பளம் என்று பார்த்தால் 1000 ரூபாயும் மற்றும் கூட்டத்திற்கு 200 ரூபாயும் மட்டும் தான். கூட்டங்கள் அதிகமாக கூட்டினால் அதற்கு ஏற்றாற்போல் படி பணம் வழங்குவார்கள். மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களை கூடி வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்துதல் இவருக்கு மிகவும் முக்கியமான பணியில் ஒன்றாகும். நிதியாண்டாக டிசம்பர் மாதம் வரையும் உள்ள கிராம வரவு செலவு கணக்கு அனைத்தையும் கிராம ஊராட்சி ஆய்வாளராக இருக்கும் மாவட்ட ஆட்சியரிடம் சப்மிட் செய்ய வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலம்
மற்றவர்களை போலத்தான் இவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் ஆகும். இவருக்கு கீழ் பணிபுரிய கணக்காளர், துப்பரவு பணியாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் போன்றோர் செயல்படுவார்கள்.
தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை 2023