பரம்பரை சொத்து உயில், உயில் பத்திரம் - பரம்பரை சொத்தை பூர்விக சொத்து என்பர். அதை யாருக்கு யார் வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அதாவது உங்கள் அப்பா பெயரில் சொத்து இருக்குமாயின் அதனை அவர் யார் பேருக்கு வேண்டுமானாலும் எழுத்து வைக்க முடியும். ஏனெனில் பரம்பரை சொத்தை பாதுகாத்து வந்தவர் அப்பாவிற்கு அப்பா அவர்கள் தான். தாத்தா அவர்கள் உங்கள் அப்பாவுக்கு சொத்தை எழுதி வைத்தார் என்றால் அந்த சொத்தானது சுய சம்பாதத்தில் சென்று விடும். இரத்த சம்மந்தப்பட்ட பிள்ளைகள் பேரில் தான் எழுதி வைக்க வேண்டும் என்பதில் எந்த வித கட்டாயம் இல்லை. மூன்றாம் நபர்களுக்கு கூட அவர் எழுதி வைக்கலாம். அவர் சரியான மன நிலைமையில் இருந்தால் மட்டுமே அது செல்லும். பரம்பரை சொத்தானது அவர்களின் வாரிசுகளுக்கு நேரடியாக சென்று விடும். அந்த சொத்தை உரிமை மாற்றம் செய்தால் தான் மற்றவர்களுக்கு எழுத முடியும்.
உயில் பத்திரம்
ஒருவேளை உங்கள் தாத்தா அவர்கள் எந்த வித உயில் பத்திரமும் அல்லது தான செட்டில்மென்ட் ஏதும் எழுத வில்லை என்றால் அவர்களின் பேரப்பிள்ளைகள் சொத்து கேட்கும் உரிமை வந்து விடும். முதலில் உங்கள் அப்பா, அம்மா மற்றும் பேரப்பிள்ளைகள் என வாரிசுரிமை அடிப்படையில் நிச்சயம் கிடைக்கும். ஆனால் உங்கள் தாத்தா அவர்கள் தான செட்டில்மென்ட் அல்லது உயில் பத்திரம் மூலம் ரெஜிஸ்டர் உங்கள் அப்பா பெயருக்கு செய்து இருந்தால் பேரப்பிள்ளைகள் சொத்து கொண்டாடும் உரிமை இல்லை. உயிலானது உங்கள் தாத்தா அவர்கள் சுய நினைவோடு எழுதி பதிவு செய்து இருக்க வேண்டும். ஏனென்றால் பதிவு செய்தால் தான் அவர் எழுதி வாய்த்த உயிலானது யாருக்கு போய் சேர வேண்டுமே அவருக்கு சரியாக போகும். ஆனால் உயிலை பதிவு செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை என்றாலும் பதிவு செய்தால் உரிய நபருக்கு எந்த வித பிரச்சனை இன்றி போகும்.
குறிப்பு
உயிலை உங்கள் தாத்தா அவர்கள் பேரப்பிள்ளைகளுக்கு எழுதி வைத்தால் உங்கள் அப்பா சொத்து கேட்கும் உரிமை இழந்து விடுகிறார்.