பத்திர பதிவு வகைகள் PDF ( பத்திரம் வகைகள் ) - பத்திரம் என்பது ஒருவருடைய சொத்து தனக்கானது மட்டுமில்லாமல் அதனை முன் யார் யார் அனுபவித்து வந்தார்கள் மற்றும் அதன் அ பதிவேடு விவரங்கள் என அனைத்தும் மிகவும் துல்லியமாக எடுத்துரைப்பது பத்திரம் எனப்படும். இந்த விவரங்கள் எல்லாம் பட்டாவில் காணப்படுவதிலே என்றே சொல்லலாம். பத்திரங்களில் ஏன் இத்தனை வகைகள் என்பது பல பெருகும் இன்றளவும் கேள்விகள் எழும்.
இங்கே மொத்தமாக கணக்கிட்டால் நிறைய வகைகள் இருக்கும். அவற்றினை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
1. உயில் பத்திரம்
2. மூல பத்திரம்
3. தான பத்திரம்
4. கிரையம்
5. விடுதலை
6. பாகப்பிரிவினை
7. செட்டில்மென்ட்
8. பவர் போன்ற பத்திரங்கள் வகைகளில் இன்றளவும் மக்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் பயன்படுத்துகின்றனர்.
உயில் பத்திரம்
ஒருவர் தான் இருக்கும்போதே அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் சுய நினைவோடு எழுதி பதிவு செய்வது ஆகும்.
மூல பத்திரம்
இப்போது இருக்கும் நிலங்களை யார் வேண்டுமானாலும் விற்கலாம் அல்லது வாங்கலாம். ஆனால் அதற்கு முன்னோடியாக இந்த மூல பத்திரம் தேவைப்படுகிறது. இந்த பத்திரம் தான் மிகவும் முக்கியமானதாகும்.
தான பத்திரம்
எந்த வித பணமும் பெறாமல் பிறர்க்கு இலவசமாக கொடுக்கும் பத்திரம் ஆகும்.
கிரையம்
ஒருவருடைய சொத்தை உரிமை மாற்றம் செய்து கொள்வது ஆகும்.
விடுதலை
தனக்கு சொத்தில் உரிமை இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் பணமோ அல்லது பொருளோ வாங்கி கொண்டு எனக்கும் அந்த சொத்திற்கும் இனி உரிமை கொண்டாடும் எண்ணம் இல்லை என எழுதி கொடுப்பது.
பாகப்பிரிவினை
சொந்த வீட்டில் பூர்வீக சொத்தையோ அல்லது பரம்பரை சொத்தையோ வாரிசுகளுக்கு சம பங்காக பிரித்து எழுதி கொடுப்பது இந்த பாகப்பிரிவினை ஆகும்.
செட்டில்மென்ட்
தனது சொந்தத்துக்குள்ளே சொத்தை பரிமாற்றி கொள்வது. இதனால் பதிவு கட்டணங்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
பவர்
என்னால் சொத்தை பார்த்து கொள்ள முடியவில்லை என்று ஒரு ஏஜென்ட் யை நியமித்து அந்த சொத்தை பார்த்து கொள்வது ஆகும்.