PATHIRAM NAGAL ONLINE DOWNLOAD

pathiram nagal online download ( நகல் பத்திரம் online ) - மிகவும் எளிமையான முறையில் நாம் பத்திரத்தின் நகலை எடுத்து கொள்ள முடியும். ஆனால் அதனை நாம் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு இடம் என்றாலும் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தலின் முக்கிய நோக்கமே சொத்தின் உரிமை சம்பந்தப்பட்டவருக்கு முறையாக செல்வதற்காக மட்டுமே.

Pathiram nagal online download


பத்திரம் தொலைந்துபோனால் இந்த வழிமுறையை பின்பற்றி நாம் நம்முடைய பத்திரத்தின் நகலை எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஒரிஜினல் டாக்குமெண்ட் நிறைய இடத்திற்கு செல்ல முடியாதவர்கள் இந்த நகலை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதையும் படிக்க: Ec வில்லங்க சான்று

வழிமுறைகள்

1. பதிவுத்துறை வெப்சைட் Tnreginet வெப்சைட் செல்லவும்.

2. புதிய கணக்கினை தொடங்க வேண்டும்.

3. உள்ளே சென்றவுடன் E services அல்லது மின்னணு சேவை இருக்கும். அதனை தேர்வு செய்து நகல் தேடல் என்று கொடுக்கவும்.

4. பிறகு உங்கள் ஆவண வகை, ஆவண எண், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆண்டு கொடுக்கவும்.

5. மண்டலங்கள் ஓபன் ஆகும். அதில் உங்கள் எந்த மண்டலமோ அதனை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி நகலை பெறலாம்.

குறிப்பு

விண்ணப்ப கட்டணம் 1 ரூபாய், கணினி கட்டணம்  100 ரூபாய், நகல் 130 ரூபாய், தேடல் கட்டணம் ரூபாய் 10 மற்றும் ஸ்டாம்ப் டூட்டி ரூபாய் 20 கட்ட வேண்டும். இந்த கட்டணம் பத்திரத்திற்கு பத்திரம் வேறுபடும்.

இதையும் படிக்க: போலி பதிவு ஆவணம் குறித்த rti தகவல்கள் pdf