பத்திரம் பெயர் மாற்றம் செய்வது எப்படி

பத்திரம் பெயர் மாற்றம் செய்வது எப்படி - பதிவுத்துறையின் கீழ் பத்திரத்தை நாம் பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும். வருவாய்த்துறை சார்பாக பட்டாவையும், பதிவுத்துறை சார்பாக பத்திரத்தினையும் பெயர்களை மாற்றி கொள்ளலாம். பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் வெப்சைட் TamilNilam உள்ளது. ஆனால் பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றம் செய்ய நேரடியாக சார் பதிவாளர் அலுவலத்திற்கு செல்ல வேண்டும்.

பத்திரம் பெயர் மாற்றம் செய்வது எப்படி


பத்திரத்தில் பெயர் மாற்றம்

1. முதலில் உங்கள் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் அல்லது எண் 1, 2 இணை சார் பதிவாளர் அலுவலத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

2. எந்த முறையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள போகிறீர்கள் என பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். உதாரணமாக செட்டில்மென்ட், உயில் மற்றும் இதர.

3. சொத்தின் உரிமையாளர் நிச்சயம் வர வேண்டும்.

இதையும் பார்க்க: பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள்

4. சொத்தின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா மற்றும் பத்திரம் இருக்கிறதா என ஆராய்தல் அவசியம்.

5. அரசு வழிகாட்டி மதிப்பின் படி சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.

6. முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் கட்டினால் போதுமானது. குறைந்த நேரத்திலேயே பெயர் மாற்றம் ஆகி விடும்.

7. பத்திரம் பெயர் மாற்றம் செய்தவுடன் தானியங்கி பட்டா மாறுதல் பதிவுத்துறையிலேயே செய்து கொடுப்பார்கள்.

இதையும் பார்க்க: பத்திரத்தில் க ச எண் என்றால் என்ன