பத்திரம் சரிபார்த்தல் - புதியதாக ஒரு இடத்தை நாம் வாங்கும்போது மிகவும் கவன நிலையில் இருக்க வேண்டும். வெறும் பட்டா நகல் வைத்து கொண்டு அந்த இடத்தினை வாங்க கூடாது. ஏனென்றால் பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதும் மற்றும் தாசில்தாரின் ஒப்புதலும் இருக்கும். ஆனால் அதுவே கூட்டு பட்டாவில் இருந்தால் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் இருக்கும். மேலும் அந்த நிலம் யாருக்கு அந்த நிலம் யாருக்கு என்பதனை கூட நாம் பார்க்க இயலும்.
பத்திரம் என்பது மூல ஆவணமாக கருதப்படுகிறது. அதாவது மூல பத்திரம் என்பர். அந்த பத்திரத்தை முழுவதுமாக படிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதனை யாரும் பின்பற்றுவதில்லை. ஏனென்றால் முதலில் அந்த இடத்திற்கு EC போட்டு பார்க்கிறார்கள். எந்த வில்லங்கமும் வரவில்லையென்றால் அந்த இடத்தினை நேரிடையாக வாங்குகின்றனர். ஆனால் அது பின்னாளில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதனை மூல பத்திரத்தில் அலசாமல் கிரையமும் செய்து விடுகின்றனர்.
ஒரு சில இடங்களின் பத்திரங்கள் மிகவும் பழமையாக இருக்கும் காரணத்தினால் சிலர் படிக்கமாட்டார்கள். முடிந்த அளவு முழுவதுமாக படிக்க வேண்டும். ஒரு சில காரணங்கள் இருந்தால் அந்த இடம் வாங்க கூடாது. அவைகளை கீழே காண்போம்.
2. அனாதீனம் நிலம்
3. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா மட்டும் இருப்பது
4. சுவாதினம் ஒப்படைப்பு இல்லாமல் இருப்பது
5. விடுதலை பத்திரம் எழுதி கொடுக்காமல் இருப்பது
மேலே உள்ள காரணங்கள் மட்டுமே அல்ல. அதற்கு மேலே கூட நிறைய நிறைய காரணங்கள் எல்லாம் அடுக்கி கொண்டே போகலாம். இந்த சிறிய சிறிய விஷயங்கள் கூட பின்னாளில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். அப்போது உங்களுக்கு கிரையம் செய்த நபர் உங்கள் பிரச்சனைக்கு வர மாட்டார். அதனால் ஒவ்வொன்றாக படித்து பிறகு ஆலோசித்து இடத்தினை வாங்க வேண்டும்.
உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்கும் நபர் பத்திரம் தொலைந்து விட்டது என்று சொன்னால் கூட அவரிடம் பத்திரத்தித்தின் ஆவண எண் வாங்கி Tnreginet இணையத்தளத்தில் செக் செய்தால் அந்த பத்திரத்தின் முழு விவரமும் அதில் வரும்.