பத்திரப்பதிவு சந்தேகங்களும் தீர்வுகளும் விரிவான விளக்கம்

பத்திரப்பதிவு சந்தேகங்களும் தீர்வுகளும் விரிவான விளக்கம் - பத்திரப்பதிவு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் நமது அரசாங்கம் சொல்லி வருகிறது. அதையும் மீறி சில பல மோசடிகள் மற்றும் பறிமுதல்கள் ஏகப்பட்டதாக வருகிறது. முக்கியமாக சொன்னால் பத்திரத்தை ரத்து செய்ய மக்கள் உயர் நீதிமன்றத்திற்கு நாடுகின்றனர். அதனை மாற்றி இனி மக்கள் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

பத்திரப்பதிவு சந்தேகங்களும் தீர்வுகளும் விரிவான விளக்கம்


கேள்வி 1

நான் என் மகனுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து விட்டேன். ஆனால் அவன் அதை நல்லபடியாக உபயோகிக்கவில்லை. நான் அதனை ரத்து செய்ய முடியுமா ?

தானம் கொடுத்தால் திரும்பவும் வாங்க முடியாது. அதில் நிபந்தனைகள் ஏதாவது நீங்கள் சொல்லி இருந்தால் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி 2

செட்டில்மெண்ட் எழுதி வாங்கிவர் பத்திரத்தை ரத்து செய்யலாமா ?

நிச்சயம் எழுதி வாங்கிவர் செட்டில்மெண்ட் பத்திரத்தை எளிதாக ரத்து செய்ய முடியும்.

கேள்வி 3

பத்திர பதிவு செய்ய கட்டணம் மற்றும் முத்திரை தீர்வை எவ்வளவு ?

கட்டணம் சொத்தின் மதிப்பை பொறுத்து தான் வசூலிக்கப்படும். மேலும் முத்திரைத்தாள் கட்டணமும் அது போல தான். உதாரணமாக ஒருவர் ஒரு நிலத்தை விற்பனை மூலம் வாங்குகிறார் என்றால் அதற்காக அவர் செலுத்தும் கட்டணமானது 11 சதவீதம் ஆகும். இந்த 11 சதவீதத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று பதிவு கட்டணமாக 4 சதவீதமும் முத்திரை தாள் கட்டணமாக 7 சதவீதமும் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் நீங்கள் பதிவு செய்யும் பத்திரத்தை பொறுத்து  இருக்கும். மேலும் முழுமையான முத்திரை தீர்வை பட்டா சிட்டா வில் பாருங்கள்.

கேள்வி 4

நான் ஒருவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தேன். அவர் என்ன கேட்காமலே அந்த இடத்தினை விற்று விட்டார். என்னால் அந்த பத்திரத்தை கேன்சல் செய்ய முடியுமா ?

கண்டிப்பாக ஒரிஜினல் உரிமையாளர் அந்த பவர் பத்திரத்தை கான்செல் செய்யும் உரிமை உள்ளது. 

முத்திரை தீர்வை

செட்டில்மெண்ட் என்றால் என்ன

Eservices