பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா

பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா - இந்த கேள்விக்கு நிறைய பேருக்கு சந்தேங்கங்கள் அதிகமாக எழக்கூடும். ஏனெனில் பதிவு செய்த உயிலும் பதிவு செய்யாத உயிலும் எப்போது கிரையம் செய்யப்படும் என்கிற குழப்பமும் அதிகமாக வரக்கூடும்.

பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா


பதிவு செய்யப்படாமல் எழுதிய உயிலை மற்றொரு பெயருக்கு கிரையம் அல்லது வேறு ஒரு பத்திரமாக பதிவு செய்ய முடியுமா?

நிச்சயம் செய்ய முடியும். பதிவு சட்டம் 18 இன் படி உயிலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்பதில்லை. மேலும் வாரிசுரிமை சட்டம் 57 இன் படி சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு புரபேட் கட்டாயமில்லை. ஆனால் இதர சான்றுகள் கட்டாயம் வேண்டும்.

இதையும் பார்க்க: Tamilnilam

16.03.2023 அன்று மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றம் பதிவு செய்யாமல் உயிலுக்கு ஒரு தீர்ப்பு வழங்கியது. ஒருவர் தன் பிள்ளைக்கு உயில் எழுதி வைத்து உள்ளார். ஆனால் அதனை பதிவு செய்யாமல் இருந்துள்ளார். இப்போது அவர் மகன் சார் பதிவாளர் அலவலகத்திற்கு எழுதிய உயில் மற்றும் இதர ஆவணங்களை  கொண்டு சென்றுள்ளார். சார் பதிவாளர் அவர்கள் புரபேட் மற்றும் பதிவு செய்யப்படாமல் இருந்தால் உயிலை பத்திரமாக பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மனுதாரர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் பதிவு சட்டம் 18 மற்றும் வாரிசு உரிமை சட்டம் 57 இல் கீழ் உயிலை கட்டாயமோ அல்லது புரபெட் கட்டாயமோ இல்லை என்று உள்ளன. அதனால் அதனை பதிவு செய்ய வேண்டுமென்று சார் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமும் இதே போல் ஒரு வழக்கிற்கு 03.07.2023 அன்று தீர்ப்பு வழங்கியது. அதற்கும் இதே தீர்ப்பை தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.

இதையும் பார்க்க: Patta Chitta EC