பதிவு செய்யப்பட்ட உயில் - உயில் என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கமாக திகழ்கிறது என்று சொன்னால் அது சரியே. இன்றயை சூழ்நிலையில் யார் எப்படி மாறுகிறார்களோ தெரியவில்லை. அதற்காக தான் அன்றய காலத்தில் இருந்து இன்றய காலம் வரை உயில் எழுதுவது கட்டாயமாக்க படுகிறது.
உயில் எழுதும்போது கண்டிப்பாக சாட்சிகள் இருக்க வேண்டும். அதும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருத்தல் அவசியம். அதில் நீங்க ஒருவராக இருக்க கூடாது. அதும் இல்லாமல் அவர்கள் உங்களை விட வயது மிக குறைவாக இருந்தால் நல்லது.
1. உயிலை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
2. அது உங்கள் விருப்பம்.
3. உயில் பதிவு செய்தால் நமக்கு நன்மையே.
4. பதிவு செய்ய நீங்கள் பதிவாளர் அலுவலகத்து சென்று அவர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் தர வேண்டும்.
5. உயில் பத்திரம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
உயிலை எழுதி முடித்த பின்னர் நீங்கள் அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். எழுதிய உயிலை நீங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று பதிவிடுங்கள். பிறகு அதில் ஒரு ஷெரொஷ் எடுத்து அங்கேயே கொடுத்து விடுங்கள்.இதற்காக நாம் ஆன்லைன் இல் பண்ண முடியாது என்பதே உண்மை.