பதிவுத்துறை வில்லங்க சான்று எடுப்பது எப்படி? ( tnreginet villangam ) - நில ஆவணங்களில் மிகவும் அதிகமாக தேடப்படுவது இந்த வில்லங்க சான்று தான். ஏனெனில் ஒரு சொத்து பரிவர்த்தனையில் ஏகப்பட்ட மோசடிகள், குழப்பங்கள் என பல்வேறு இருந்தாலும் இந்த வில்லங்கம் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் உள்ள வில்லங்க சான்றிதழை நாம் பெற ஆன்லைனில் எடுத்து கொள்ள கூடிய வசதியை பதிவுத்துறை ஏற்படுத்தி தந்துள்ளது. நீண்ட காலத்திற்கு தேவையான சான்றிதலை பெற நேரடியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்றால் போதுமானது. சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கின்ற விண்ணப்ப படிவம், கட்டணம் மற்றும் அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் போதுமானது. கொஞ்ச நேரத்திலேயே வந்து விடும்.
இதையும் பார்க்க: Tamilnilam
பதிவுத்துறை வெப்சைட் இல் இதுமட்டுமல்லாமல் சங்கங்களை பதிவு செய்ய, திருமண பதிவு, பதிவிற்கு உண்டான கட்டணம், வழிகாட்டி மதிப்பு என அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.
இதையும் பார்க்க: Eservices.tn.gov.in