பட்டா / சிட்டா விவரங்களை சரிபார்க்க - குறிப்பு எண்

பட்டா / சிட்டா விவரங்களை சரிபார்க்க - குறிப்பு எண் - வருவாய்துறையினர்களால் கொடுக்கப்படுகின்ற இந்த பட்டா அல்லது சிட்டா தற்போது மிகவும் ஒரு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் ஒரு நில உரிமையாளரை உறுதிப்படுத்த பட்டா தேவைப்படுகின்றது.

பட்டா / சிட்டா விவரங்களை சரிபார்க்க - குறிப்பு எண்


ஆனாலும் பத்திரமும் ஒரு வகையில் முக்கியம் தான். பத்திரமானது பதிவுத்துறையினர்களால் கொடுக்கப்படுகின்றது. இரண்டும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஒரு நில உரிமையாளரை நூறு சதவீதம் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஆவணங்களாக கருதப்படுகின்றது.

மேலும் படிக்க: Grama natham

பட்டாவில் பட்டா எண், சர்வே எண், உட்பிரிவு எண், நிலத்தின் தன்மை, உரிமையாளர் பெயர், தந்தை பெயர், கிராமம், வட்டம், மாவட்டம், அளவீடு என கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே பார்த்தால் குறிப்பு என ஒன்று இருக்கும். அது எதற்காக நாம் பயன்படுத்தலாம் என்ன தேவை என பார்க்கலாம்.

மேலும் படிக்க: TamilNilam

பட்டாவில் இறுதியில் இருப்பது

மேற்கண்ட தகவல் / சான்றிதழ் நகல் விவரங்கள் மின் பதிவேட்டில் இருந்து பெறப்பட்டவை ஆகும். இதில் தாங்கள் eservices வெப்சைட் 14/24/0000000000 என்ற குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்

இந்த மேல் உள்ள பத்தியில் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் மின்னனு சேவையில் நாம் எடுக்கின்ற பட்டாவும் மேலே உள்ள குறிப்பு எண்ணை கொண்டு சரிபார்க்கும் பட்டாவும் ஒன்று தான் செக் செய்து கொள்ள வேண்டும்.

மற்ற இரண்டு குறிப்புகளும் அது எப்போது பதிவேற்றம் செய்யப்பட்டது என்றும்  கைபேசி மூலமும் ஸ்கேன் செய்தும் எடுத்து கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: Ec Patta