பட்டா என்றால் என்ன

பட்டா என்றால் என்ன ( Patta endral enna ) மற்றும் பட்டா சிட்டா என்றால் என்ன - பட்டா என்பது ஒரு நிலம் மற்றும் அதனை சார்ந்த இடங்களின் உரிமையாளர் யார் என்பதை குறிக்கும். உதாரணமாக ஒரு நிலத்தை நீங்கள் சமீபத்தில் வாங்கி உள்ளீர்கள் எனில் அந்த நிலம் உங்கள் பெயருக்கு மாற்றி விடுவீர்கள் ஆனால் அது உங்களுக்கு சொந்தமாகும். இதனை தான் எழுத்துபூர்வமாக பட்டா என்பர். நீங்கள் மனை அல்லது நிலம் எங்கு வாங்கி இருந்தாலும் உங்கள் பெயர் மற்றும் தகப்பனார் பெயர் அதில் அப்டேட் செய்து இருக்கும். மேலும் பட்டாவில் நிலத்தின் தன்மை, நிலத்தின் பரப்பளவு போன்றவைகள் அதில் தோன்றும். பட்டாவில் என்னென்ன இருக்கும் என்பதை கீழே பார்ப்போம்.

பட்டா என்றால் என்ன


1. உரிமையாளர் 

2. தந்தை பெயர் 

3. மாவட்டம் 

4. தாலுகா அண்ட் வில்லேஜ் 

5. சர்வே நம்பர் 

6. உட்பிரிவு நம்பர் 

7. நஞ்சை, புஞ்சை அல்லது நத்தம் ஏதாவது ஒன்றை காட்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நிலங்களை நீங்கள் வாங்கலாம். ஆனால் அதனை நீங்கள் முறையாக பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்து இருக்க வேண்டும். நீங்கள் ஒரே ஊரில் நிலங்களை வாங்கி இருந்தால் சிட்டா மூலம் எத்தனை நிலங்களை நீங்கள் வாங்கி உள்ளீர்கள் என பார்க்கலாம். பட்டாவில் ஏராளமான வகைகள் உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. மனை வரைய தோராய பட்டா 

2. உயில் பட்டா 

3. கிராம நத்தம் பட்டா 

4. வில்லங்கம் பட்டா 

5. யூ டி ஆர் பட்டா 

6. 2சி பட்டா

7. கூட்டுப் பட்டா 

8. தனி பட்டா 

9. நில பட்டா 

மேலே உள்ளது மட்டும் தான் பட்டா இல்லை. அதில் நிறைய வகைகள் உள்ளன. நீங்கள் பட்டாவை ஆன்லைனில் எடுக்கும் பட்சத்தில் Eservices என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் பட்டாவை காணுங்கள்.