பட்டா எப்படி இருக்கும்? ( Patta eppadi irukum ) - ஒரு நில உரிமையாளரின் முதல் ஆவணம் தான் இந்த பட்டா. ஒரு நிலத்தின் உரிமையாளரை நிர்ணயம் செய்வது பட்டா மற்றும் பத்திரம் இவை இரண்டும் தான். இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் பிரச்சனை தான்.
ஒரு பட்டாவானது ஒரு பேப்பர் பக்க அளவுகளில் மட்டுமே இருக்கும். அதாவது ஒரே பக்க அளவு கொண்டது தான் பட்டா. இதில் உள்ள வகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. அயன்
2. கூட்டு
3. தோராயம்
4. தனிப்பட்டா
இதில் பெரும்பாலும் கூட்டு மற்றும் தனிப்பட்டா மட்டும் தான் 99 சதவீதம் மக்களிடம் இருக்கும்.
ஒரு பட்டாவில் நில உரிமையாளர் பெயர், அவரின் தந்தை பெயர், வருவாய் கிராமம், அது என்ன வகை பட்டா, பட்டா நம்பர் புல மற்றும் உட்பிரிவு எண்கள், நிலத்தின் வகைப்பாடு, தீர்வை, நில அளவு, குறிப்புரைகள் மற்றும் குறிப்பு 2 என இத்தனை விவரங்கள் இருக்கும்.
இதையும் படியுங்க: வில்லங்கம் பார்ப்பது எப்படி