பட்டா மாறுதல் விண்ணப்ப எண் status செய்ய தேவையான ஆவணங்கள், இணைய வழி பட்டா மாறுதல் online application ( பட்டா மாறுதல் அரசாணை ) - பொதுவாக பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்றால் அரசாணை எண் 31 இன் படி, மூன்று விதமாக மாறுதல் செய்ய முடியும்.
1. தாமாகவே மாற்றம் செய்வது. அதாவது நிலங்களின் சொந்தக்காரர் அவர்கள் அவரே முன் வந்து பாக பிரிவினை அல்லது தான செட்டில்மென்ட் மூலம் மாற்றுவது.
2. ஒரு சில வழக்குகளில் நீதிமன்றமே நிலத்தின் உரிமையாளருக்கு ஆணை இட்டு கட்டாயமாக மாறுதல் செய்ய சொல்வது.
3. வாரிசுரிமை பட்டா மாறுதல்.
இதையும் காண்க: வாரிசு சான்றிதழ் புதிய நடைமுறை
பட்டா மாறுதல் அரசாணை
இந்த மூன்று விதமாக தான் பட்டாவை நாம் மாற்றம் செய்ய இயலும். அரசாணை எண் 210 நாள் 08.07.2011 அன்று தமிழக அரசு வருவாய் துறை அலுவலகர்களுக்கு ஒரு அரசாணையை பிறப்பித்தது. அது என்னவென்றால் உட்பிரிவு செய்யப்படாமல் மாறுதல் செய்ய வேண்டுமாயின் 15 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் எனவும் உட்பிரிவு செய்தால் 30 நாட்களுக்குள் பிரச்சனையை சரி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதையும் படிக்க: பட்டா நகல் பெறுவது எப்படி
இந்த முப்பது நாட்களுக்குள் அலுவலர்கள் எந்த வித நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்றால் அப்போது வருவாய் கோட்டாட்சியரிடம் பட்டா பாஸ் புத்தக சட்டம் 1983 பிரிவு 12 இன் கீழ் மேல்முறையீடு செய்யலாம். இந்த முப்பது நாட்களுக்கு அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் பிரிவு 13 ன் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் 90 நாட்களுக்குள் சீராய்வு மனு ஒன்றை எழுதி கொடுக்கலாம்.
பட்டா மாறுதல் online
பொது மக்களுக்கு மீண்டும் ஒரு நற்செய்தியை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் மாறுதல் செய்ய நாம் வருவாய் துறை சார்ந்த அலுவலர்களை நேரில் விண்ணப்பம் கொடுக்காமலே ஆன்லைனில் மாறுதல் செய்து கொள்ளலாம். இதற்காக அரசு தமிழ்நிலம் என்கிற வெப்சைட் யை உருவாக்கினார்கள். அதில் கேட்கும் ஆவணங்களை அப்லோட் செய்தாலே 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் நடக்கும்.