பட்டா பெறும் முறை - பட்டா வழங்கும் முறை

பட்டா பெறும் முறை, பட்டா வழங்கும் முறை - முன்பு எல்லாம் பத்திர பதிவு செய்து இருந்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது கண்டிப்பாக பட்டாவை வாங்கியே தீர வேண்டும் என்பதே உண்மை. மேலும் புது பட்டாக்களை பெற நாம் நடையாய் நடக்க வேண்டி இருக்கும். அனால் தற்போதுள்ள நடைமுறையில் அந்த கஷ்டங்களை நாம் பெற தேவையில்லை. தற்போது பத்திரப்பதிவு முடிந்த உடனேயே பட்டாவையும் மாற்றும் வசதி உள்ளது. இதனால் நீங்கள் ஒரு இடத்தினை கிரையம் செய்த பின்னர் அந்த இடத்தின் பட்டாக்கான நகல் ஆன்லைனிலே ஏறி விடும்.

பட்டா பெறும் முறை


புதிதாக பட்டா வழங்கும் முறை

எப்படி பார்த்தாலும் நீங்கள் ஒரு இடம் வாங்கிக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தினை ஏற்கனவே ஒருவர் பட்டா மற்றும் பத்திரங்களை வைத்து கொள்வார். நீங்கள் அதே இடத்தினை வாங்கும்போது பத்திரம் கிரையம் செய்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு சிலர் பத்திரம் மட்டுமே கிரயம் செய்து  அமைதியாக இருக்கின்றனர். இதனால் பின்னாட்களில் பெரிய பிரச்சனைகளை அவர் சந்திக்க கூடும்.

பட்டா பெறும் முறை 

நாம் இதை நேரடியாகவே பத்திர பதிவு ஆபீஸ்க்கே சென்று அப்ளை செய்யலாம். தகுந்த ஆவணங்களை ரெடி செய்வது நல்லது. நீங்கள் விண்ணப்பித்த உடனே அது வந்து சேராது. ஏனென்றால் நிறைய பேர் அப்ளை செய்கிறார்கள். ரிப்போர்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்றால் அது உண்மையே.

தேவைப்படும் ஆவணங்கள்

1. விண்ணப்பதாரர் ஒரிஜினல் போட்டோ 

2. நகல் ( தேவைப்படும் ஆவணங்கள் )

3. பத்திர பதிவு சான்றிதழ் மற்றும் ஒரிஜினல் 

4. உங்களுடைய ப்ரூப் ஏதாவது ஒன்று 

5. கட்டணம்.

சொத்து மதிப்பு சான்றிதழ் 

அக்ரீமண்ட் பத்திரம் 

ரத்து பத்திரம்