பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி

பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி - பயனாளர்கள் பட்டா வேறு பத்திரம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பட்டா ஒரு இடத்திற்கு யார் சொந்தக்காரர் என்று தாசில்தாரின் மூலம் ஒரு சான்றிதழை வழங்குவது ஆகும். மேலும் பட்டா ஒரே ஒரு பக்கம் தான் இருக்கும். அதில் சிட்டா, அடங்கல், புஞ்சை, நஞ்சை மற்றும் தீர்வை போன்றவைகள் இருக்கும்.

1 சென்ட் என்பது எத்தனை சதுர அடி

பத்திரம் சரிபார்த்தல்

பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி


ஆனால் பத்திரம் என்பது பட்டா போன்றதல்ல. ஏனென்றால் ஒரு இடத்திற்கு மூல ஆவணமாக கருதப்படுகிறது. அதாவது மூல பத்திரம் எனலாம். முதன் முதலில் யார் யார் நிலத்தை வைத்து இருந்தனர், எத்தனை சென்ட் இடம் மற்றும் யார் யாரிடம் இடம் கைமாறியது போன்ற தகவல்களும் பத்திரத்தில் அடங்கி இருக்கும்.

மேலும் பத்திரம் அந்த இடத்தின் சொத்து மதிப்பு, தீர்வை மற்றும் சாட்சிகள் பொறுத்து பக்கங்கள் வேறுபடும். இதனை நாம் ஒரு ஆவண எழுத்தாளர் மற்றும் நோட்டரி பப்ளிக் வக்கீல் கொண்டு எழுதலாம். அவ்வாறு எழுதிய பத்திரத்தை நாம் நேரில் கொண்டு தான் பிழைத்திருத்தம் செய்ய முடியும்.

கேள்வி 1

பட்டா பத்திரமாக மாற்ற முடியுமா ?

பட்டா வேறு மற்றும் பத்திரம் வேறு. பட்டாவை பத்திரமாக மாற்ற முடியாது.

கேள்வி 2

என்னிடம் நிலம் உள்ளது. ஆனால் பட்டா மட்டும் தான் உள்ளது.இதனால் பின்னாளில் பிரச்சனை ஏதாவது வருமா ?

உங்களிடம் பட்டா உள்ளது என்றால் போதுமானது. மேலும் அன்றைய கால கட்டங்களில் தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு பட்டா மட்டுமே வழங்கியது.

கேள்வி 3

பத்திரம் இல்லாத நிலத்திற்கு என்னிடம் பட்டா உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முடியுமா ?

கண்டிப்பாக மிகவும் கஷ்டம் தான். ஏனென்றால் இப்போது பத்திரம் மற்றும் பட்டா உள்ள நிலங்களே ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கிறது. அதனால் பத்திரம் இல்லாத நிலங்களை இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் வாங்க மாட்டார்கள்.

கேள்வி 4

பத்திரம் மட்டும் என் பெயரில் மாற்றி விட்டேன் . ஆனால் பட்டா பெயர் மாற்ற தாமதமாகிறது. அதனால் பட்டா பெயரை பின்னாளில் பொறுமையாக வாங்கிக்கலாமா ?

கண்டிப்பாக கூடாது. பத்திரம் உங்கள் பெயருக்கு மாற்றிய உடன் பட்டா பெயரை மாற்றி விடுங்கள்.

நிலவியல் பாதை என்றால் என்ன

Eservices