பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005 Pdf

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005 Pdf - பெண்களுக்கான சொத்து உரிமை சட்டம் 1956 லிருந்துஇப்பொது வரை கடைபிடித்து வரப்படுகிறது. அதில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வருகிறது. 1956 க்கு முன்னர் சட்டம் பெண்களுக்கு வீட்டில் தங்கும் உரிமை மற்றும் சீதனம் என்ற முறையில் கொடுக்கின்ற வரதட்சணையே சொத்து ஆகும்.

பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் 2023

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005 Pdf


1956 மற்றும் 1989 சட்டம்

1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்று அரசாணையை பிறப்பித்தது. பிறகு 1989 ஆம் ஆண்டு கொண்டு வந்த மற்றொமொரு சட்டம் பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம உரிமை உள்ளது என்று 25.03.1989 தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.

2005 சட்டம்

2005 இந்து வாரிசுரிமை சட்டம் படி, பெண்களுக்கு அப்பா 2005 முன்னர் இல்லை என்றால் அவர்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு இல்லை என்றும் கூறியது. இதனை உச்சநீதிமன்றம் 11.08.2020 அன்று ததிருத்தம் கொண்டு வந்தது. அது என்னவென்றால் பெண்களுடைய அப்பா இருந்தாலும் இல்லை என்றாலும் பூர்வீக சொத்தில் சம உரிமை இருக்கிறது என்று கூறியது.

முக்கியமாக அது பூர்வீக சொத்து அல்லது வேறு ஏதாவது சொத்தாக இருக்கும் பட்சத்தில் அதனை பாக பிரிவினை மற்றும் உயில் எழுதாமல் இருந்தால் சொத்து வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் பெண்களுக்கு வந்து சேரும். மேலும் இது போல வழக்கு வந்தால் அதை ஆறு மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறுதியாக ஒட்டுமொத்த அரசாணை, பெண்களும் பங்காளிகள் போலவே சொத்து கேட்கும் மற்றும் சொத்து கொடுக்கும் உரிமை உள்ளதை 1956, 1989, 2005 மற்றும் 2020 சொல்கிறது. 

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

Fb பேஜ்