பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் 2022 - பெண்களுக்கும் ஆண்களை போல சம உரிமை என்பதை சட்டம் 1956, 1989 மற்றும் 2005 சொல்கிறது. இந்த சட்டம் வந்து தான் பெண்களுக்கும் மற்றவர்களை போல் சொத்து கேட்கும் உரிமை உள்ளதை சொன்னது.
இந்த மூன்று வகையான சட்டங்களும் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது என்றும் அறிவித்தது. இப்பொது 20.01.2022 உச்ச நீதி மன்றம் மற்றொமொரு தீர்ப்பை ஒரு வழக்கில் கூறியது. அது என்னவென்றால் பெண்களுக்கு கிடைக்கும் சொத்து அவர்களுக்கு பிறகு யாருக்கு போய் சேரும் என்பதை இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15 கீழ் என்ன சொல்கிறது என்றால் பெண்களுக்கு கொடுக்கும் சொத்து அவர்களுக்கு பிறகு முதல் நிலை வாரிசுகளான கணவன் அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு சேரும் என்றும் அப்படி அவர்களும் இல்லாத நிலையில் மறுபடியும் அந்த சொத்து பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு செல்லும் என்பதனை சட்டம் 2022 சொல்கிறது.
கேள்வி 1
பூர்வீக சொத்தை போல் சுய சம்பாதித்த சொத்திற்கு உரிமை உள்ளதா ?
நிச்சயம் உண்டு. தன் தந்தை அல்லது தாயார் சேர்த்து சம்பாதித்த சொத்தை கேட்கும் முழு உரிமை அந்த பெண்ணிற்கு உண்டு.
கேள்வி 2
பெண்ணின் தந்தை உயில் எழுதி வைத்து போனால் அந்த சொத்து பெண்ணிற்கு வருமா ?
அந்த உயில் இந்த பெண்ணிற்கும் சொத்தில் உரிமை உள்ளது என்று சொன்னால் பிரச்சனை இல்லை. மாறாக உயில் இவர்களை பெயர் எழுதாமல் மற்றவர்கள் பெயர் எழுதி இருந்தால் அந்த பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி 3
அந்த பெண்ணிற்கு தெரியாமல் (உயில் எழுதாமல் மற்றும் தந்தையும் இல்லாமல் ) சொத்தை விற்பனை அல்லது பாகப்பிரிவினை செய்து விட்டார்கள் இப்பொது என்ன செய்வது ?
நிச்சயமாக வழக்கு தொடர்ந்தால் அந்த பெண்ணிற்கு சாதகமாக அமையும். ஏனென்றால் அந்த பெண்ணிடமும் சம்மதம் வாங்கி விடுதலை பத்திரம் எழுதிய பிறகு தான் அந்த சொத்து விற்க முடியும்.
கேள்வி 4
தந்தை தனது சுய சம்பாதித்த சொத்தை ஏற்கனவே பாகப்பிரிவினை அல்லது விற்பனை செய்து விட்டார் என்றால் என்ன செய்வது ?
பெண்ணின் தந்தை அந்த சொத்தை பாகப்பிரிவினை, வேறு யாருக்காவது விற்று கிரையம் செய்து விட்ட நிலையில் ஒன்றுமே செய்ய முடியாது அந்த பெண்ணால். மேலும் அந்த சொத்தானது 20.12.2004 க்கு முன்னர் விற்ற சொத்து என்றால் கண்டிப்பாக மறுபடியும் பெற முடியாது.