பெயர் மாற்றம் படிவம் 2024

பெயர் மாற்றம் படிவம் ( gazette name change form pdf download tamil nadu ) - நமது பெயரை மாற்ற வேண்டுமென்றால் அரசு கெஜெட்டில் மாற்றலாம் என்று அனைவருக்கும் தெரியும். ரூபாய் 115 கட்டணமாக இணையதள செலுத்து சீட்டு செலுத்தி நமது பெயரை மாற்றி கொள்ளலாம். தபாலிலோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். செலுத்து சீட்டு கண்டிப்பாக இணையதள வாயிலாக தான் இருக்க வேண்டும்.

பெயர் மாற்றம் படிவம்


மொத்தமாக ஐந்து அச்சங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த ஐந்து அச்சகங்களில் எது உங்கள் கிளையோ அங்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ விண்ணப்பம் பெற்று அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான விதிமுறைகள் அனைத்தும்  படிவத்திலேயே காணப்படும்.

இதையும் பார்க்க: அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

அச்சகங்களின் கிளைகள்

1. புதுக்கோட்டை கிளை - புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம்.

2. விருத்தாசலம் ( கடலூர் ) கிளை - கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை.

3. மதுரை கிளை - மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

4. சென்னை கிளை - திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை.

5. திருச்சி கிளை - சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி.

இதையும் பார்க்க: சொத்து மதிப்பு பார்க்க