Pf உள்நுழைவு - Pf என்பதை ஆங்கிலத்தில் Provident Fund என்று அழைப்பார்கள். தொழிலாளர்கள் அவர்கள் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்கிறார்கள். தொழிலாளர்கள் எந்த கம்பெனியில் வேலை செய்கிறார்களோ அவர்களே உங்கள் Pf பணம் தொகைகளை அனுப்புவார்கள். இந்த 12 சதவீதம் மூன்று விதமாக கணக்கிடப்படுகிறது.
1. பென்ஷன்
2. வருங்கால வைப்பு இருப்பு
3. மருத்துவ காப்பீடு மற்றும் இன்சூரன்ஸ்
இந்த மூன்று திட்டம் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களுக்கு பன்னிரண்டு சதவீதம் பிடித்தம் செய்கிறார்கள். முன்பு எல்லாம் எவ்வளவு Pf பிடிப்பார்கள் என்று மட்டுமே தெரியும். ஆனால் எவ்வளவு மொத்த பணமும் ப்ரொவிடென்ட் Fund ஆக அப்டேட் செய்து இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இப்போது ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் மற்றும் மொத்தமாக என்ன பணம் என்று ஒவ்வொன்றாக அப்டேட் செய்து இருக்கிறார்கள்.
ஒரு தொழிலாளருக்கு ஒரு UAN நம்பர் மட்டும் தான் வழங்குவார்கள். ஒருவேளை தொழிலாளர் வேறு ஒரு கம்பெனிக்கு செல்லும் நேரத்தில் அதே நம்பர் வைத்து யூஸ் செய்யலாம். இருப்பு தொகை பற்றி அறிய இலவச தொலைபேசி எண்ணை கூட நீங்கள் காண்டாக்ட் செய்யலாம். அந்த இலவச டோல் பிரீ நம்பர் 01122901406. ஒருவர் எத்தனை Fund கணக்குக்குள் வேண்டுமாலும் வைக்கலாம். ஆனால் ஒரே ஒரு ID தான் கொடுப்பார்கள். இந்த நம்பர் தெரிந்து கொள்ள உங்கள் pay slip யை பாருங்கள்.