Phh குடும்ப அட்டை என்றால் என்ன ( குடும்ப அட்டை வகை Phh ) ( AAY குடும்ப அட்டை வகைகள் ) - Phh என்பது முன்னுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் என்று பொருள். மேலும் Phh என்பதற்கு ஆங்கில பொருள் Priority household என்பது அர்த்தம். 2021 Tnpds நிலவரப்படி, கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைகள், 6 கோடி பயனாளிகள் இந்த ரேஷன் கார்டு திட்டத்தினை உபயோகப்படுத்துகின்றனர்.
இந்த Phh கார்டு உள்ளவர்கள் அரசின் எந்த விதமான சலுகைகளும் மிகவும் எளிதாக பெற முடியும். முக்கியமாக சொன்னால் இதனை அரிசி அட்டை என்றும் கூட நாம் சொல்லலாம். இந்த அட்டை வகை முன்பக்கத்தில் உங்கள் ஸ்மார்ட் கார்டில் என்டர் செய்து இருப்பார்கள்.
அதாவது உங்கள் ஸ்மார்ட் கார்டு குடும்ப தலைவர் போட்டோ, முகவரி மற்றும் இதர டீடெயில்ஸ் அனைத்தும் என்டர் செய்து இருப்பார்கள். இந்த Phh குறியீடு குடும்ப தலைவர் போட்டோ கீழ் இருக்கும். மேலும் பயனாளிகள் Phh மட்டும் தான் ரேஷன் அட்டையில் உள்ளது என்று நினைத்து கொள்ள வேண்டாம். Phh-AAY மற்றும் NPHH இது போன்ற வகைகள் ஏராளமாக உள்ளதை நாம் காணலாம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான அட்டையாக கருதப்படும். இந்த Phh அட்டை தான் அனைத்துக்கும் முன்னுரிமை. இதனை முன்னுரிமை அட்டை என்றும் நாம் கூறலாம். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட் கார்டு எந்த நியாய விலை கடைகளிலும் உபயோகப்படுத்தலாம். இந்த திட்டத்தின் பெயர் ஒரே நாடு ஒரே அட்டை என்பர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் பின்னாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.