பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்

பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் - பிறப்பு சான்றிதழ்  இப்பொழுது வாங்குவது மிகவும் சுலபமாக ஆகி விட்டது. ஆனால் முதல் இரண்டு மாதங்களுக்குள் வாங்கி விட வேண்டும். அப்படி இல்லையென்றால் பிறந்த சான்றிதழ் பெறுவதற்கு நீங்கள் அலைந்து திரிந்து தான் வாங்க வேண்டும். உதாரணமாக இன்று உங்கள் குழந்தை பிறந்தது என்றால் இன்று முதல் 20 நாட்களுக்குள் Birth செர்டிபிகேட் வாங்கணும் என்று மருத்துமனை அலுவலகர்கள் கூறுவார்கள். 

பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்


ஏனென்றால் மருத்துமனையில் நிறைய ரெகார்டஸ் இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக வாங்கி விடுங்கள். அப்படி ஒரு சில நேரங்களில் அவர்கள் கூறிய நேரத்தில் வாங்க முடியவில்லை என்றால் ஒரு மாதத்திற்கு உள்ளேயே வாங்கணும். இது ஒரு சில மருத்துவமனைகளுக்கு வேறுபடும்.

இதற்காக உங்கள் ஆதார் கார்டு, மனைவியின் ஆதார், பிக்மி எண், டிஸ்சார்ஜ் கார்டு இவை மட்டுமே ஆவணங்களாக பிறந்த செர்டிபிகேட்டிற்கு தேவைப்படுகிறது. அவர்களே ஒரு விண்ணப்பித்தினை கொடுப்பார்கள் அதை சரியாக பூர்த்தி செய்தாலே ஓரிரு நாட்களுக்குள் கொடுத்து விடுவார்கள். இதில் குழந்தையின் பெயர் கரெக்ட் ஆக எழுத வேண்டும். ஏனென்றால் பின்னாளில் திருத்தம் செய்வதேனென்றால் மிகவும் சிரமமாக இருக்கும்.

பெயர் அல்லது சிறிய திருத்தம் என்றால் உங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் சென்று அவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் உங்கள் பிறப்பு சான்றிதழ் வந்து விடும். இதற்கு 200 ரூபாய் வரையும் நீங்கள் கொடுக்க நேரிடும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்தால் கிராம நிர்வாக அலுவலகரும் மருத்துவ மனைகளில் பிறந்தால் மருதுவமனையிலும் சான்றிதழ் பெற்று கொள்ளலாம். இதனை மிகவும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வையுங்கள். இதனை உங்கள் மின்னஞ்சலில் சேமித்து வைத்தால் பின்னாளில் தொலைந்தாலும் வாங்கி விடலாம்.

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf படிவம்

Crstn