பிழைத்திருத்தல் பத்திரம் - பிழைத்திருத்தம் என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் பத்திரங்களில் நாம் அப்படி செய்வது நமக்கே எதிர்காலத்தில் பிரச்சனைகளை வர கூடும். அதனால் இனிமேல் எழுத போகும் நபர் யாராக இருந்தாலும் பத்திரங்களை மிகவும் கவனத்தோடு எழுதுதல் அவசியம். பிழை திருத்தல் பத்திரம் in English Rectification Deed என்பார்கள்.
இதையும் படிக்க: Tslr என்றால் என்ன
பிழை திருத்தல் பத்திரம் மாதிரி - பத்திரத்தில் பிழை திருத்தம் இருந்தால் அதனை மாற்றுவதற்கு எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம். பத்திரங்கள் எழுதுதல் பிழை இருப்பின் அவை பிழைத்திருத்தம் எனப்படும். இவற்றில் இரண்டு வகையான பிழை பத்திரங்கள் உள்ளது. ஒன்று சாதாரண பிழை மற்றொன்று உரிமை மற்றும் பத்திரம் ஆகும்.
திசைகள், எல்லைகள், பெயர், Initial, முகவரி, FMB மற்றும் இதர திருத்தங்கள் இருந்தால் அது சாதாரண பிழை திருத்தம் ஆகும். இதனை மனை அல்லது நிலம் விற்ற நபர்கள் சரி செய்து தர வேண்டும். அதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு செலவு ஏதும் நாம் கட்ட தேவையில்லை. மேலும் ஏதாவது அடித்தல் திருத்தல் இருந்தால் அங்கு விற்ற நபரும் வாங்கும் நபரும் கையொப்பம் கட்டாயம் இடுதல் வேண்டும். ஒருவேளை நீங்கள் தவறாக எழுதுவது தெரிந்தால் அந்த இடத்தில் எதையும் வைத்து அலைக்க வேண்டாம்.
இதையும் படியுங்க: வில்லங்கம் பார்ப்பது எப்படி
சர்வே எண் மற்றும் நில அளவுகள் பிழைகளாக இருந்தால் கண்டிப்பாக புதிதாக கிரைய பத்திரம் போட வேண்டும். ஏனென்றால் ஒரு survey எண்னை மாற்றினால் வேறு ஒரு இடம் காட்டும் அல்லது மற்றொரு ஊர் சுற்றிய நிலங்களை காட்டும். ஒருவேளை நீங்கள் விற்ற நபர் பிழைத்திருத்தலுக்கு வர வில்லை என்றால் நீதிமன்றம் சென்று அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்.