பிஎம் கிசன் ஸ்டேட்டஸ், பின் கிசான் லிஸ்ட் - பிஎம் கிசன் நிதி பணம் ஒவ்வொரு வருடத்திற்கும் மூன்று முறை ஏழை விவசாயிகளுக்கு தலா 2000 வீதம் ரூபாய் 6000 வழங்குகிறது. ஆனால் அந்த பணம் அனைவருக்குமே போய் சேருவதில்லை. இந்த முறை மத்திய அரசாங்கம் போலியான பி எம் கிசான் கணக்குகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்த கணக்கை வைத்து தகுதி இல்லாத நிறைய பேர் பணம் வாங்கி இருந்தனர். அவற்றை கண்டுபிடித்து பல பேரின் கணக்குகளை 2022 ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதங்களில் முடக்கினர். ஆனாலும் அரசாங்கம் KYC வேண்டுமென ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பை வழங்கியது. அதாவது கிசான் நிதி உதவித்தொகை பெறுகிறவர்கள் ஆதார் அட்டையுடன் கிசான் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று அறிவித்திருந்தது.
எப்படி இந்த கிசான் பணம் உங்க வங்கி கணக்குக்கு வருகிறதா என்பதை செக் செய்வது ?
கிசான் பணம் வருவதனை நாம் எளிதாக அறிய முடியும். ஆனால் மக்கள் இந்த வழிகளை தெரியாமல் வங்கிக்கு சென்று அவ்வப்போது செக் செய்வதும் அல்லது மற்றொரு விவசாயிடம் சென்று தவணை பணம் வந்துவிட்டதா என்று வினவுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பம்
1. Pmkisan என்கிற இணையத்தளம் தான் கிசான் பணம் செக் செய்ய உதவும்.
2. மேலே குறிப்பிட்டுள்ள இந்த வெப்சைட் சென்றால் டாஷ்போர்ட செலக்ட் செய்யுவும்.
3. மூன்றாவதாக நான்கு Options அனைத்தும் தேர்வு செய்ய வேண்டும். அவைகள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமம்.
கிசான் கார்டு வாங்குவது எப்படி
4. இதனை சரியாக செய்தாலே உங்கள் பெயர் மற்றும் அதன் டீடெயில்ஸ் அனைத்தும் வந்து விடும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எத்தனை தவணைகள் வந்துருக்கிறது மற்றும் தவணைகள் வராமல் இருப்பது போன்ற விஷயங்களும் அதில் அடங்கும்.
5. உங்கள் டீடெயில்ஸ் மட்டுமல்லாது உங்கள் கிராமத்தில் யார் யார் தவணைகள் மூலம் பணம் பெறுகிறார்கள் என்றும் பார்த்து கொள்ளலாம்.