போலி ஆவணம் மோசடி பத்திரம் ரத்து - இப்போது உள்ள சூழ்நிலையில் போலி மற்றும் மோசடி பத்திர பதிவுகள் ஏராளமாக இருக்கிறது. அதனை ரத்து செய்யவே அரசாங்கமும் பத்திர பதிவு துறையும் போராடி வருகிறது. அப்படியும் தவறான பத்திர பதிவு நடந்து கொண்டே தான் இருக்கிறது. அரசும் அவ்வப்போது அவர்கள் பக்கம் சுற்றறிக்கை விட்டு கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாவட்ட பதிவாளர்கள் இதனை பின்பற்ற வேண்டும் என பதிவு துறை தலைவர்கள் கூறியுள்ளார்கள்.
முதலில் மாவட்ட பதிவாளர்கள் போலி ஆவணம் என கண்டுபிடித்தால் அது செல்லாது மற்றும் ரத்து செய்ய முடியும் என இறுதியாணை வழங்கலாம். இதனை தவிர்த்து அதற்குண்டான காரணங்களையும் ஒரு வெள்ளை தாளில் குறிப்பிட்டும் சொத்தின் சொந்த உரிமையாளரை மேற்படி இனிமேல் பத்திர பதிவு செய்ய அனுமதிக்கவும் என தகுந்த காரணங்கள் காட்டி குறிப்பிட்டு இருக்க வேண்டும். போலி ஆவணங்கள் தயாரித்த நபர்கள் மீது சட்டம் 1908 பிரிவு 83 இன் கீழ் குற்றவியல் வழக்கும் தொடுக்கலாம்.
இப்பொழுது வந்துள்ள சுற்றறிக்கை மார்ச் 25.03.2022 அரசாணை எண் 41530/யு1/2017 என்னவென்றால் மாவட்ட பதிவாளர்களால் முடியாத நிலையில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதனை துணை பதிவு துறை தலைவர்கள் பின்பற்ற வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து ஏற்கனவே ஒரு பதிவு நடந்துருந்தாலும் அல்லது அதற்கு பின்பு ஏதாவது ஒரு சொத்து பரிமாற்றம் செய்திருந்தாலும் அந்த ஆவணமும் ரத்து ஆகலாம்.
கடந்த 27.10.2021 அன்று ஒரு பதிவுத்துறையின் கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் பத்திரம் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களின் குறைகளை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மண்டல மற்றும் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமைகளில் மனுக்களை கொடுக்கலாம் என்று பதிவுத்துறை மற்றும் வணிகவரி துறை அமைச்சர் அதில் சொல்லி இருந்தார்.