பூந்தோட்ட மின் இணைப்பு - பூந்தோட்ட இணைப்பும் ஒரு வகையில் விவசாயம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் இதற்கான மின்சார கட்டணம் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது. அதனால் பூந்தோட்ட விவசாயிகள் மற்ற இலவச விவசாய மின் இணைப்பு போல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
மின்சார கட்டணம்
ஆரம்ப கட்டத்தில் மின்சார கட்டணமாக ஒரு யூனிட்க்கு ரூபாய் 3 லிருந்து 5 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது. இப்பொழுது அந்த கட்டணம் அதை விட கூடுதலாக இருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8 ரூபாய் வரை வசூல் செய்ய படுகிறது. இந்த கட்டணம் மாவட்டங்கள் அல்லது கிராம புறங்களில் வேறுபடலாம்.
மின் இணைப்பு பெற தகுதியானவர்கள்
போர் வேல் மற்றும் விவசாய கிணறு உள்ள நபர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். இதற்கு அப்ளை செய்ய வயது வரம்பு தேவை இல்லை. யார் வேண்டுமாலும் அப்ளை செய்யலாம். ஆனால் மேலே கூறிய விவரங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏகப்பட்ட மின் இணைப்புகள் உள்ளது உதாரணமாக சுய நிதி பிரிவு, இலவச விவசாய மின் இணைப்பு.
பூந்தோட்ட விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் ரூபாய் 5000 முதல் 10000 வரை பணம் செலுத்துகின்றனர்.
பூந்தோட்ட மின் இணைப்பு பெற அருகில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்று அப்ளை செய்யலாம். அதற்காக அவர்கள் ஒரு படிவத்தை கொடுப்பார்கள். அதை பூர்த்தி செய்து மற்றும் இதர ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்லைனில் படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.