பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் - பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா அல்லது பாகப்பிரிவினை செய்ய முடியுமா என்பது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது. அதை எவ்வாறு பிரிப்பது அல்லது பிரிக்க முடியுமா என்பதை பற்றி பார்ப்போம்.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்


பூர்வீக சொத்து 

பூர்வீக சொத்து என்பது உங்கள் அப்பா அம்மா தாத்தா பாட்டி முப்பாட்டன் போன்றவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் பூர்வீக சொத்துகள் எனப்படும். இந்த வகை சொத்துக்கள் நேரிடையான வாரிசுகள் அல்லது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் மூலம் சொத்துக்கள் சேரும்.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா ? 

தான செட்டில்மெண்ட் என்பது சொந்த குடும்பத்தில் சொத்தை கொடுப்பது ஆகும். கண்டிப்பாக பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியும். ஆனால் அது சுய சம்பாதித்த சொத்தாக மாற்றினால் தானம் செய்ய முடியும். 

எடுத்துக்காட்டு 1

ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து பெண்கள் மற்றும் ஆண்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த பூர்வீக சொத்து யாருக்குமே எழுதப்படாமல் இருந்தால் வாரிசுகள் அடிப்படையில் அந்த ஐந்து பேரிடமும் செல்லும். அந்த ஐந்து நபர்கள் பாகப்பிரிவினை செய்த பின்னர் அவர்கள் தானம் கொடுக்கலாம்.

எடுத்துக்காட்டு 2

பூர்வீக சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களுடைய மகன்கள், மகள்கள் இருப்பின் அந்த சொத்துக்கள் யாருக்கு போய் சேரும். முதலில் அண்ணன் தம்பிகள் அந்த சொத்துக்களை பிரித்து கொள்ளலாம். அவர்கள் தனியாக பிரித்து கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு தானம் கொடுக்கலாம். ஒருவேளை அதில் அண்ணன் இல்லை அவர் மக்கள் மட்டுமே உள்ளார்கள் எனில் அந்த பிள்ளைகளுக்கு சரி சமமான பாகமும் தம்பிக்கும் செல்லும்.

பூர்வீக சொத்துக்கள் அவர்கள் பெயருக்கு எப்போது மாற்றி விட்டார்களோ அது தனி சொத்து அல்லது சுய சம்பாதித்த சொத்தாக கருதப்படும். அதனால் கண்டிப்பாக அந்த சொத்துக்களை விற்பனை , கிரையம் மற்றும் தானம் வழங்கலாம்.

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை 

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005

Tn.Gov.In