பூர்வீக சொத்தை உயில் எழுத முடியுமா - இந்த பெயரை வாசித்தாலே அதில் உள்ள அர்த்தங்கள் அல்லது விவரம் நாம் அறிந்து கொள்ள முடியும். பூர்வீகம் என்பது காலங்காலமாக தொன்று தொட்டு வருவது ஆகும். அதேபோல் தான் இந்த பூர்வீக சொத்தும் காலங்காலமாக வருகின்றன. ஒரு சில நேரத்தில் பதியப்படாமல் தொடர்ந்து இந்த பூர்வீக சொத்துக்கள் இருக்கின்றன.
உதாரணமாக ஒரு தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்களின் வாரிசாக ஒருவர் மட்டுமே உள்ளார். ஆனால் உயில் எழுதி வைக்கவில்லை மற்றும் செட்டில்மென்ட் ஏதும் செய்யவில்லை. இப்போது அந்த சொத்தானது நேரடியாக வாரிசு அடிப்படையில் அவரின் பிள்ளைக்கு சேரும். அதாவது அவர் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்யாமல் இருந்தால் இவரின் பிள்ளைகள் அல்லது வாரிசுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக செல்லும். இதேயே இரண்டு வாரிசுகள் இருந்தால் இருவருக்கும் அந்த சொத்தானது இரண்டாக பிரியும். பாகப்பிரிவினை செய்து பத்திரம் செய்து கொள்ளலாம் அல்லது யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்து விடுதலை பத்திரம் எழுதி கொடுக்கலாம்.
இதையும் படிக்க: உயில் எத்தனை ஆண்டுகள் செல்லும்
காலங்காலமாக பூர்வீக சொத்தை பாதுகாத்து வந்தாலும் அதனை பெயர் மாற்றம் செய்யாவிடில் அது பூர்வீக சொத்தாகவே கருதப்படும். எப்போது உங்கள் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றதோ அப்போது தான் சுய சம்பாத்தியம் ஒன்று வருகிறது. இந்த சுய சம்பாதித்த சொத்து மற்றொருவருக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தால் பிற்காலத்தில் அதுவும் பூர்வீக சொத்தாகவே கருதப்படும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: உயில் எழுத ஆகும் செலவு 2023
பூர்வீக சொத்தை கொண்டு உயில் எழுத முடியுமா
பூர்வீக சொத்தை நிச்சயம் உயில் எழுத முடியாது. ஆனால் சொத்தை தன் பெயருக்கு மாற்றிய பின்னர் தான் உயில் எழுதி வைக்க முடியும். யார் உயில் எழுத போகிறாரோ அவரின் மேல் சொத்து உரிமை இருக்க வேண்டும்.
இதையும் படியுங்க: உயில் ரத்து செய்வது எப்படி