போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2025

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2025 ( post office savings scheme tamil 2025 pdf interest rate calculator ) - போஸ்ட் ஆபீஸில் முன்னர் எல்லாம் சேவிங்ஸ் கணக்கு மட்டும் தான் மக்கள் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது அஞ்சல் துறையில் ஏகப்பட்ட திட்டங்களை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அவற்றில் ஒன்று தான் தேசிய நேர சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஏகப்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2025


தேசிய நேர சேமிப்பு திட்டங்கள் 2025

இந்த Scheme வெறும் ஐந்து வருடங்களிற்கு மட்டுமே செயல்படும். ஐந்து வருடத்திற்கு மேலே வேண்டுமென்றால் மறுபடியும் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும். முதலில் எப்போது கணக்கு தொடங்குகிறீர்களோ அப்போது மட்டும் தான் நாம் டெபாசிட் செய்யணும். ஒருமுறை போட்ட பணத்தை ஐந்து வருடத்திற்குள் எப்போது வேண்டுமாலும் எடுக்க முடியாது. அந்த சேமிப்பு கணக்கு எப்போது முடிகிறதோ அப்போது தான் அந்த பணம் உங்கள் கைக்கு சேரும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 

இந்த கணக்கை தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. ஒருவர் ஒரே ஒரு கணக்கை மட்டும் தான் தொடங்க முடியும். ஆனால் ஒரே அக்கௌன்ட்யை மூன்று பெயரும் joint செய்து கொள்ளலாம். இதற்காக ஆதார் கார்டு, இரண்டு புகைப்படம் மற்றும் பான் கார்டு போன்றவைகள் நகல்கள் அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தமாக நீங்கள் கட்டிய பணத்திற்கு 6.8 சதவீதம் வட்டியினை இந்த துறை உங்கள் கட்டிய பணத்திற்கு கொடுக்கிறது. எக்காரணம் கொண்டும் இந்த வட்டி விகிதம் மாறாது. மேலும் நாமினேஷன் ஆக யார் வேண்டுமென்றாலும் நீங்கள் தேர்ந்து எடுத்து கொள்ள முடியும்.

உதாரணமாக பயனாளிகள் 1000 ரூபாய் கட்டி இருக்கிறார்கள் என்றால் அதற்கான சான்றிதழ் பத்திரம் ஒன்றை தருவார்கள். அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்து ஐந்து வருடம் கழித்து வந்து கொடுத்தால் 1, 389 ரூபாயாக தரப்படும். இதில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம்.

அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் 2025

மேலே கூறிய திட்டம் மட்டும் தான் உள்ளது என வாசகர்கள் நினைத்து கொள்வது தவறு. இதனை விட மிக சிறப்பான திட்டங்கள் மக்களுக்கு அஞ்சல் துறை வழங்கி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான அஞ்சல் அலுவலக திட்டங்களில் சில மட்டும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1. மாதாந்திர சேமிப்பு திட்டம்

2. பொன் மகள் சேமிப்பு திட்டம் 2025

3. பொன்மகன் சேமிப்பு திட்டம் calculator 2025