பொது தகவல் அலுவலர் முகவரி

பொது தகவல் அலுவலர் முகவரி ( சென்னை மற்றும் சேலம் ) - முதலில் பொது தகவல் அலுவலர் என்பவர் யார் என்பது பற்றி பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் public information officer எனலாம். தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பார்வையில் 30 க்கும் மேற்பட்ட அரசாங்க துறைகள் உள்ளது. அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உள்துறைகள் உள்ளது. உதாரணமாக வருவாய் துறை இருக்கிறது என்றால் அதன்கீழ் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளது.

பொது தகவல் அலுவலர் முகவரி


ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் என்று ஒருவர் இருப்பார். இவருடைய பணி என்னவென்றால் தகவல் கேட்கும் மனுதாரருக்கு தக்க பதில்கள் அல்லது தகவல்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டும். மனுதாரர் கொடுத்த 30 நாட்களுக்குள் தகவல்களை கொடுக்க வேண்டும். அப்படி பதில்களை தர மறுத்தால் பிரிவு 18 ( 1 ) மற்றும் 18 ( 2 ) இன் கீழ் மனுதாரர் பொது தகவல் அலுவலர் மேல் புகார் செய்யலாம்.

இதையும் படிக்க: தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் pdf

முகவரிகளை அறிய tnsic வெப்சைட் சென்று நீங்கள் மனு அளிக்கும் துறையினை தேர்வு செய்தால் அலுவலரின் முகவரிகளை காண்பிக்கும். அப்படி தெரிவில்லை என்றால் மனுவில் பொது தகவல் அலுவலர் மற்றும் நீங்கள் தகவல் கேட்கும் அலுவலகத்தின் முகவரி போதுமானது.

இதையும் படிக்க: கிராம நிர்வாக தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள்