பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, பொதுப்பாதை வழக்கு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு ( பொது பாதை ஆக்கிரமிப்பு மனு ) அல்லது பொதுப்பாதை வழக்கு அல்லது வண்டி பாதை - இன்றைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதில் அரசாங்க நிலமும், தனியார் நிலமும் ஆக்கிரமிப்புகளுக்குள் ஆளாகின்றன. இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அரசாணை 540 எண் சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவரங்கள் எதுவாக இருந்தாலும் இந்த அரசாணை எண் 540 கொண்டு அகற்றலாம் என சட்டம் சொல்கிறது.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு


உதாரணம்

எங்கள் தெருவில் உள்ள நபர்கள் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர், தரை போட்டு கொள்கின்றனர். இவற்றினை எவ்வாறு தடுப்பது?

ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களை கொடுக்கலாம் அல்லது நகராட்சியாக இருந்தால் ஆணையரிடமும் மனுக்கள் கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905

இவர்கள் நடவடிக்கைகள் எடுக்காவிடில் வட்டாட்சியரிடம் பொது பாதை ஆக்கிரமிப்பு மனு எழுதி கொடுக்கலாம். அப்படி மனுக்கள் எழுதி கொடுத்த பின்னர் தகுந்த ஆவணங்களாக உள்ள கிராம வரைபடம், அடங்கல் நகல் அல்லது அந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரம் இவைகள் இருந்தால் நிச்சயம் அதனை வட்டாட்சியர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க சொல்வார்.

குறிப்பு

வாகனங்கள் செல்ல வண்டிப்பாதையை அடைத்து அதில் சுவர், ஆடு மாடு கட்டுதல் மற்றும் அந்த பாதையை அவர்கள் மட்டுமே பயன்படுத்தினாலும் மனுக்கள் தாசில்தாரிடம் கொடுக்க முடியும்.

நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம்