பவர் ஏஜென்ட் - பவர் ஏஜெண்டை தமிழில் நாம் முகவர் என்றும் சொல்லலாம். தன்னால் முடியாத ஒரு சில காரணத்தினால் நிலத்தின் சொந்தக்காரர்கள் ஒரு நபரை நியமிப்பார்கள். அவர்கள் பவர் ஏஜென்ட் என்று அழைக்கப்படுவார்கள். எதற்காக இந்த பவர் ஏஜெண்டுகள் நியமிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கேள்வி 1
பவர் பத்திரம் போட்ட நபர் நிலம் அல்லது இடத்தை விற்பனை செய்ய முடியுமா ?
கண்டிப்பாக விற்பனை செய்யலாம். அதற்கு முதல்வரின் ஒப்புதல் கடிதமும் மற்றும் முதல்வரின் லைப் செர்டிபிகேட் அவசியம்.
கேள்வி 2
பவர் ஏஜென்ட் எத்தனை பேரை நியமிக்கலாம் ?
அதற்கு வரம்பு இல்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பவர் ஏஜெண்டுகளாக நியமிக்கலாம்.
கேள்வி 3
பவர் பத்திரத்திரத்தை பவர் ஏஜெண்டுகள் அனுமதி இல்லாமல் ரத்து செய்ய முடியுமா ?
முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம்.
கேள்வி 4
பவர் ஏஜென்ட் முதல்வருக்கு தெரியாமல் நிலத்தை விற்று விட்டார் ?
கண்டிப்பாக அந்த பத்திரம் செல்லாது. மேலும் ஒரிஜினல் உரிமையாளர் தனக்கு தெரியாமல் விற்று விட்டால் அந்த நிலம் கண்டிப்பாக விற்பனை செய்ய பட்டாலும் அந்த நிலம் இவருக்கே வந்து சேரும்.