பவர் ஆஃப் அட்டர்னி

பவர் ஆஃப் அட்டர்னி - இதை பொது அதிகார பத்திரமும் என்றும் கூறலாம். பொதுவாக அதிகமான ஆட்கள் பொது அதிகார பத்திரத்தினை உபயோகப்படுத்துவார்கள். இதில் விற்பவரை விட வாங்குபவரே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது இரண்டு பேர்கள் பத்திரத்தில் இடம் பெரும் ஒன்று முதன்மையாளர் அல்லது முதல்வர் மற்றொன்று ஏஜென்ட். இதில் முதல்வர் வந்து சொத்தினை விற்றால் அல்லது விற்க வரும்போது வந்தாலும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. மாறாக ஏஜென்ட்யை நியமித்து அவர்கள் சில பல குளறுபடிகள் செய்தால் தான் ஏராளமான பிரச்சனைகள் இருக்கும்.

பவர் ஆஃப் அட்டர்னி


அப்டேட் ஏப்ரல் 06, 2022

இப்பொழுது வந்துள்ள செய்தி என்னவென்றால் பொது அதிகாரமாய் சொத்தை வாங்கும் நபர்கள் முகவருக்கு விற்பனை அதிகாரம், பதிவு செய்யும் அதிகாரம் மற்றும் அப்படி பதிவு செய்யும்போது அனைத்து அதிகாரிகள் முன்னிலையிலும் செய்ய வேண்டும் என கவனித்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் கவனிக்க தவறினால் அந்த பத்திரம் செல்லாது எனவும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் கேரளா வழக்கில் ஏப்ரல் 01, 2022 அன்று சட்டம் கொண்டு வந்துள்ளது.

பொது அதிகார சொத்தை வாங்கும் மக்கள் கவனிக்க வேண்டியவைகள் 

1. முதலில் இந்த பொது அதிகார சொத்து பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் 

2. முத்திரைத்தாள் கட்டணம் 

3. முகவரிக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்று சரிபார்க்க வேண்டும் 

4. அப்படி எல்லாம் சரியாக இருந்தால் முதல்வரின் அதாவது சொத்தின் உரிமையாளர் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க சொல்லுங்கள் 

5. இந்த பிரச்சனைகள் எல்லாம் வர கூடாது என்றால் அந்த சொத்தின் உரிமையாளரே வந்தால் தான் தீரும். அவரும் வர முடியாத  நிலையில் அல்லது பார்த்துக்கொள்ள முடியாத நிலையும் தான் காரணம்.

தனி அதிகார பத்திரம்

ஜெனரல் பவர் பத்திரம்

Eservices